மேலும் அறிய

Sachin on KL Rahul: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர்... கே.எல்.ராகுலை திடீரென பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்... விவரம் இதோ!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடியதாக சச்சின் டெண்டுகள் கூறியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. 

இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 2 ரன்களில் நடையைக்கட்டினார். பின்னர், வந்த விராட் கோலின்38 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 31 ரன்களும் எடுக்க, இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 70 ரன்களுடனும், சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது.  ஆட்டம் தொடங்கியபோதே கேஎல் ராகுல் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது

இச்சூழலில்,  137 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 101 ரன்கள் எடுத்தார். அந்த வகையில், கே.எல்.ராகுல் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார்.  சென்சுரியன் மைதானத்தில் கே.எல்.ராகுல் அடிக்கும் 2 வது சதம், அதோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுலின் 8 வது சதம் இதுவாகும்பின்னர், தென்னாப்பிரிக்க வீரர் நந்த்ரே பர்கர் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக இந்திய அணி 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. தற்போதைய நிலவரப்படி தென்னாப்பிரிக்க அணி 56 ஓவர்கள் முடிவில் 3 விக்கெடுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

சச்சின் பாராட்டு:

இந்நிலையில், இப்போட்டியில் பந்து வீச்சில் அபாரமான துவக்கத்தை பெற்ற தென்னாப்பிரிக்க அணியை கடைசியில் மகிழ்ச்சியுடன் ஃபினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு ராகுல் அசத்தலாக பேட்டிங் செய்ததாக  சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். மேலும் இந்த போட்டியில் ராகுல் ஃபுட் வொர்க் தம்மை மிகவும் கவர்ந்ததாக  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள பதிவில், “சிறப்பாக விளையாடினீர்கள் கேஎல் ராகுல். அவருடைய தெளிவான சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. அவரின் ஃபுட் வொர்க் துல்லியமாகவும் உறுதியுடனும் இருந்தது. அது பேட்ஸ்மேன் சரியாக செயல்படும் போது நிகழக் கூடியதாகும். இந்த சதம் இப்போட்டியில் முக்கிய திருப்பு முனையாக இருக்கும்.

நேற்று ஒரு கட்டத்தில் இருந்ததை வைத்து இந்தியா தற்போது 245 ரன்களை எடுத்ததில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நன்ரே பர்கர் மற்றும் ஜெரால்ட் கோட்சி ஆகியோர் தென்னாப்பிரிக்கா பவுலிங் துறையில் நல்ல முறையில் இருக்கிறார்கள். இருப்பினும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்கா தங்களுடைய பந்து வீச்சு செயல்பாடுகளால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanniyarasu Slams Aadhav Arjuna: ’’விஜய்தான் முக்கியமா! திருமாவை அவமதிக்காதே!'’ வன்னியரசு எச்சரிக்கைAllu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Embed widget