(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA, 1st Test: ரன் மழைக்கு இடையூறு செய்யும் மழை: இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க தாமதம்!
போட்டி நடைபெறும் மைதானத்தில் மழை குறுக்கிட்டுள்ளதால், இரண்டம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பேட்டிங்கைத் தொடங்கிய கே.எல்.ராகுலும்- மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர்.
அதனை தொடர்ந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களுடன் களத்தில் உள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்தில் 122 ரன்களை குவித்துள்ளார். அதில் 16 பவுண்டரிகளும், 1 சிக்ஸர்களும் அடங்கும். ’செஞ்சூரியனில் செஞ்சுரி அடித்த வீரர்’ என ரசிகர்கள் ராகுலின் சதத்தை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video: "என்னிடம் இருந்து இதுதான் எதிர்ப்பார்க்கப்படுகிறது” - ராகுல் ஓபன் டாக்!
முதல் நாளை அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், போட்டி நடைபெறும் மைதானத்தில் மழை குறுக்கிட்டுள்ளதால், இரண்டம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், சிறிது நேரம் மழை ஓய்ந்திருக்கிறது. அதனை அடுத்து, மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், போட்டி தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
Persistent rain has delayed the start of Day 2 in Centurion ☔
— ICC (@ICC) December 27, 2021
India are 272/3 with KL Rahul (122*) and Ajinkya Rahane (40*) at the crease.#WTC23 | #SAvIND pic.twitter.com/M12pHg0KdV
முதல் நாள் ஆட்டத்தின்போது ராகுல் அடித்த சதத்தின் மூலம், அவர் பல சாதனைகைகளை படைத்துள்ளார். முதலில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தான் விளையாடிய அனைத்து நாடுகளிலும் தற்போது வரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் இதுவரை 7 சதம் அடித்துள்ளார். அவற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என அனைத்து நாடுகளிலும் இவர் சதம் கடந்து அசத்தியுள்ளார். இதைபோல் ஆசியாவிற்கு வெளியே அதிகம் சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலிலும் இவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்