IND vs NZ: பெங்களூரில் விளையாடும் மழை! வேடிக்கை பார்க்கும் இந்திய - நியூசிலாந்து வீரர்கள்!
பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரில் தொடங்குகிறது. பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
பெங்களூரில் விடாமல் பெய்யும் மழை:
இந்த நிலையில், போட்டி தொடங்கும் நாளான இன்றும் வானிலை காலை முதலே மோசமாக இருந்து வந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு முதல் மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தடைபட்டுள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவுதால் ஆட்டம் தொடங்குவதற்கும் இன்னும் கூடுதல் நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரில் மழை தற்போது குறைந்து வருவதால் ஆட்டம் விரைவில் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
It's still raining here in Bengaluru 🌧️
— BCCI (@BCCI) October 16, 2024
The wait continues ⏳
The first session has unfortunately been washed out.
Match Centre - https://t.co/FS97Llv5uq#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/BUDWJ8Mw1v
பெங்களூர் மைதானத்தைப் பொறுத்தவரை அங்கு சிறப்பான மழைநீர் உறிஞ்சும் வசதி இருப்பதால் கண்டிப்பாக விரைவில் மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் வசதி இருப்பதால் விரைவில் தண்ணீர் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தொடங்குவதில் தாமதம்:
இதனால், மழை விட்டதும் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரானது இந்திய அணிக்கு மிகவம் சவாலானது மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த 3 போட்டிகளில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றால் இந்திய அணி மிக எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்க முன்னேறிவிடும்.
இந்த நிலையில், இந்திய அணி இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்க உள்ள டெஸ்ட் போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய பகுதி முற்றிலும் ரத்தாகியுள்ளது.
டாஸ் போடப்படுமா?
தற்போது வரை டாஸ் கூட போடப்படாததால் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் மட்டுமாவது போடப்படுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பெரியளவு மழை இல்லாவிட்டாலும் தொடர்ந்து தூறலாக மழை பெய்து வருவதால் ரசிகர்களும் எப்போது மழை நிற்கும் என்று காத்திருக்கின்றனர். மழை காரணமாக பெங்களூரில் பல இடங்களிலும் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.