மேலும் அறிய

IND vs NED T20 WC LIVE: இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

IND vs NED T20 World Cup 2022 LIVE Score : இந்தியா- நெதர்லாந்து அணிகள் டி20 போட்டிகளில் மோதுவது இதுவே முதன்முறை. அந்தவகையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

LIVE

Key Events
IND vs NED T20 WC LIVE: இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Background

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று ஒரே நாளில் 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி, சிட்னியில் இன்று காலை 8.30 மணிக்கு தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளும், நண்பகல் 12.30 மணிக்கு இந்தியா- நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றனர். அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாவே அணியை மாலை 4.30 மணிக்கு சந்திக்கிறது. இந்த போட்டியானது பெர்த்தில் நடைபெற இருக்கிறது. 

இந்திய அணியை பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பவுலிங் அணியில் பலமாக இருக்கும் இந்திய அணி, இன்றைய நெதர்லாந்து அணிக்கு எதிரான 2 வது போட்டியில் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 நெதர்லாந்து அணி எளிதாக கருதக்கூடாது. டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் நெதர்லாந்து விளையாடிய 3 போட்டிகளில் 2 ல் வென்று கெத்துகாட்டி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. இருப்பினும், நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியிடம் தோல்வியுற்றது. 

இந்தியா - நெதர்லாந்து அணிகள் இதுவரை நேருக்குநேர் : 

இந்தியா- நெதர்லாந்து அணிகள் இதுவரை ஒரு முறை கூட டி20 போட்டிகளில் சந்தித்தது இல்லை. இதுவே முதல்முறை. முன்னதாக, இரு அணிகளுக்கு 2 ஒருநாள் போட்டிகளில் சந்தித்து, அதில் இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. 

மழைக்கு வாய்ப்பா..? 

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் 30 சதவீத மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. போட்டி தொடங்கி சிறிது நேரத்தில் மழையின் வாய்ப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 51 சதவீத ஈரப்பதத்துடன் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். அதேபோல், 12 சதவீத மேக மூட்டமும் காணப்படும். 

அணி விவரம்: 

இந்தியா அணி: ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), யஜ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர்.அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் ஹூடா.

நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), கோலின் ஆக்கர்மேன், டாம் கூப்பர், பாஸ் டி லீட், பிராண்டன் குளோவர், பிரெட் கிளாஸன், ஸ்டீபன் மைபர்க், தேஜா நிடமனரு, மேக்ஸ் ஓ தாவுத், டிம் பிரிங்கிள், ஷரிஸ் அகமது, லோகன் வான் பீக், டிம் வாண்டெர் மெர்வ், பால் வான் மீகரன், விக்ரம்ஜித் சிங்.

15:53 PM (IST)  •  27 Oct 2022

இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

15:35 PM (IST)  •  27 Oct 2022

இந்தியா சிறப்பான பந்து வீச்சு

16 ஓவர்களில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது. 24 பந்துகளில் 93 ரன்களை நெதர்லாந்து எடுக்க வேண்டியுள்ளது.

15:21 PM (IST)  •  27 Oct 2022

அஸ்வினுக்கு 2வது விக்கெட்

நெதர்லாந்து அணியின் வீரர் டாம் கூப்பரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார். காலின் அக்கர்மேன் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார். இந்த இன்னிங்ஸில் இது அஸ்வினுக்கு 2வது விக்கெட் ஆகும்.

15:00 PM (IST)  •  27 Oct 2022

நெதர்லாந்து அணி திணறல்

நெதர்லாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

14:15 PM (IST)  •  27 Oct 2022

IND vs NED T20 WC LIVE: அரைசதம் விளாசிய சூர்யகுமார், கோலி.. இந்திய அணி 179 ரன்கள்

20 ஓவர்களின் முடிவில் இந்தியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!”  திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!” திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...
Bengaluru Suicide Case: மனைவி, மாமியார் தந்த மன உளைச்சல்! தூக்கில் தொங்கிய ஐடி ஊழியர் - வேதனை
Bengaluru Suicide Case: மனைவி, மாமியார் தந்த மன உளைச்சல்! தூக்கில் தொங்கிய ஐடி ஊழியர் - வேதனை
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும் சாமுண்டீஸ்வரி! கண்டிஷன் போடும் ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும் சாமுண்டீஸ்வரி! கண்டிஷன் போடும் ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget