மேலும் அறிய

IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி...கே.எல்.ராகுல் விலகல்?

பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் தொடர்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும்,  நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளதுஅதேபோல்தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறதுஇச்சூழலில்கடைசி மூன்று தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் கே.எல்.ராகுலும் இடம்பெற்றார். ஆனால், உடற்தகுதியை கருத்தில் கொண்டு அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரியும் என்று பிசிசிஐ தெரிவித்தது.

கே.எல்.ராகுல் விலகல்:

இந்நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அணியில் இல்லாததால் 4-வது இடத்தில் களமிறங்கினார் கே.எல்.ராகுல். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடினார்.

அதன்படி, முதல் இன்னிங்ஸில் 123 பந்துகள் களத்தில் நின்று 86 ரன்களை எடுத்துக்கொடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்கள் எடுத்தார். இச்சூழலில் தான் காயம் காரணமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். ஆனால், மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்ற கே.எல்.ராகுல் இன்னும் 100 சதவீத உடற்தகுதியை பெறவில்லை என்பதால் 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அவருக்கு பதிலாக இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனான தேவ்தட் படிக்கல் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. மற்றொரு போட்டி ட்ராவில் முடிந்துள்ளது. இதனால் பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்ற பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க: Watch Video: 7 -ம் நம்பர் ஜெர்சியை அணிந்தது ஏன்? தோனி கொடுத்த விளக்கம்! வைரல் வீடியோ!

மேலும் படிக்க: India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்... இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget