Jaiswal: செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! இங்கிலாந்து மண்ணில் ஆடிய முதல் போட்டியிலே சதம்
Jaiswal: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் அபார சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடர் தொடங்கும் முன்பு இங்கிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாகவே கருதப்பட்டது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய அணியை விட பலமாக உள்ள இங்கிலாந்து அணியை இந்திய அணி எப்படி சமாளிககப்போகிறது? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
மிரட்டிய ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல்:
இந்த நிலையில், லீட்ஸில் நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், அவர் பந்துவீச்சைத் தேர்வு செய்ததற்கு எந்த பலனும் பெரியளவில் கிடைக்கவில்லை. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடியை அவர்களால் பிரிக்க இயலவில்லை. மைதானம் பென்ஸ்டோக்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு பந்துவீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன், டங், கேப்வன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் வீசியும் வேகத்தால் இந்திய தொடக்க ஜோடியை அவ்வளவு எளிதாக அசைக்க முடியவில்லை.
📸 📸
— BCCI (@BCCI) June 20, 2025
A celebratory run 👌
The hands aloft 🙌
The trademark jump ☺️
Updates ▶️ https://t.co/CuzAEnBkyu#TeamIndia | #ENGvIND | @ybj_19 pic.twitter.com/E4PDGDOKEb
2 விக்கெட்டுகள்:
முதல் செசன் முடிவற்கு முன்பு சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 42 ரன்களில் அவுட்டானார். அவர் 78 பந்துகளில் 8 பவுண்டரியுடன் இந்த ரன்களை எடுத்தார். பின்னர், அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் ஸ்டோக்ஸ் ஓவரில் அவுட்டானார். அதன்பின்பு, ஜெய்ஸ்வால் - கேப்டன் சுப்மன்கில் ஜோடி சேர்ந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு 2 விக்கெட்டுகள் விழுந்ததால் எஞ்சிய விக்கெட்டுகளை காலி செய்யலாம் என்று இங்கிலாந்து கணக்கு போட்டது.
ஜெய்ஸ்வால் அபார சதம்:
ஆனால், ஜெய்ஸ்வால் - சுப்மன்கில் ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த ஜோடியை பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீரையும் பயன்படுத்தினார். ஆனால், இந்த ஜோடி ஒருநாள் போட்டி போல ஆடியது. குறிப்பாக, கேப்டன் சுப்மன்கில் தொடர்ந்து மிக எளிதாக இங்கிலாந்து பந்துவீச்சை கையாண்டார்.
இதனால், இந்திய அணியின் ஸ்கோர் நிற்காமல் ஏறிக்கொண்டே இருந்தது. 92 ரன்னில் சேர்ந்த இந்த ஜோடி 200 ரன்களை எளிதாக கடந்தது. அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசியில் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார். ஜெய்ஸ்வால் 159 பந்துகளில் 16 பவுண்டரி 1 சிக்ஸருடன் 101 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
சுத்தமாக எடுபடாத பவுலிங்:
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் அதன்பின்பு ஆடிய டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினார். இதனால், இந்த தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இருந்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியை குறைவாக மதிப்பிட்ட நிலையில் பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் இல்லாத குறை பந்துவீச்சில் அப்பட்டமாக தெரிந்தது.
மூத்த பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ், முக்கிய பந்துவீச்சாளர்கள் ப்ரைடன் கார்ஸ், டங் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இந்திய அணி இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் வலுவான ரன்களை குவித்தால் கண்டிப்பாக அடுத்த நாட்களில் இங்கிலாந்திற்கு நெருக்கடி அளிக்கலாம்.




















