Bumrah; பூம்.. பூம்.. பும்ரா! டெஸ்ட் கிரிக்கெட் பவுலிங்கில் கிங்! நம்பர் 1 இடம் பிடித்து அசத்தல்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஐ.சி.சி. மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்து விளையாடும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சில் சிறப்பாக ஆடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பும்ரா முதலிடம்:
அதில், இந்திய பந்துவீச்சாளர் பும்ரா 881 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 842 புள்ளிகளுடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் அஸ்வின் 841 புள்ளிகளுடன் உள்ளார்.
இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளரான பும்ரா, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் முக்கிய அங்கமாக உள்ளார். முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், அந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
கடந்த டெஸ்ட் போட்டியிலும் பும்ரா சிறப்பாகவே பந்துவீசினார். இந்திய அணி கடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பும்ராவின் பந்துவீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.
India pacer Jasprit Bumrah holds top spot in men's Test bowler rankings
— ANI Digital (@ani_digital) February 14, 2024
Read @ANI Story | https://t.co/CXiRCi1GSC#JaspritBumrah #TestBowler #InternationalCricketCouncil pic.twitter.com/U4HVhv8OzU
பேட்டிங்கில் யார் டாப்?
பந்துவீச்சு தரவரிசை மட்டுமின்றி பேட்டிங் தரவரிசையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 818 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 797 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் கோலியை தவிர டாப் 10 வீரர்கள் பட்டியலில் எந்த இந்தியரும் இல்லை. விராட் கோலி 760 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 13வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் அக்ஷர் படேல் 5வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். சுப்மன்கில் 2வது இடத்திலும், விராட் கோலி 3வது இடத்திலும், ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நாளை 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சில் ஷமி இல்லாத நிலையில், பும்ரா – சிராஜ் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.
மேலும் படிக்க: MS Dhoni: என்னா மனுஷன்யா...சிறுவயது நட்பை மறக்காமல் தோனி செய்த செயல்!
மேலும் படிக்க: Jasprit Bumrah: கிண்டல் செய்த நபர்.. பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் கொடுத்த பதிலடி!