Jasprit Bumrah: கிண்டல் செய்த நபர்.. பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் கொடுத்த பதிலடி!
சமூக வலைதளத்தில் தன்னை கிண்டல் செய்த நபரை கடுமையாக கண்டித்துள்ளார் ஜஸ்ப்ரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன்.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமானவர். அதேபோல், டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்தவகையில், இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 155 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதேபோல், 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். டி20 போட்டிகளை பொறுத்தவரை 62 போட்டிகள் விளையாடி 74 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் பும்ரா.
இந்நிலையில் தான் தொலைக்காட்சி தொகுப்பாளரும், மாடலுமான சஞ்சனா கணேசன் என்பவரை கடந்த 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் கூட தான் இந்திய அணிக்காக எடுத்த விக்கெட்டுகளை தன்னுடைய மகனுக்கு அர்ப்பணிப்பதாக பும்ரா கூறியிருந்தார்.
View this post on Instagram
இதனிடையே, குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது மனைவியுடன் வெளியில் பயணிப்பது என தன்னுடைய குடும்பத்தினருடன் இருந்து வருகிறார் பும்ரா. அதேநேரம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பும்ரா வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள சூழலில் பும்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
கிண்டல் செய்த நபர்:
சஞ்சனாவின் பதிலடி:
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், “என்ன அண்ணி பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருக்கிறீர்கள்? என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கமெண்ட்டினை வெளியிட்டுள்ள சஞ்சனா கணேசன், "உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் என்ன இருக்கிறது? என்பது உனக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண்ணின் உடல் வடிவம் பற்றி இங்கு கருத்து கூறுகிறாய். இங்கிருந்து ஒழுங்காக ஓடி விடு" என்று அந்த நபரை கண்டித்துள்ளார். இதனிடையே ரசிகர்கள் சிலர் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றி யோசியுங்கள் என்பது போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video: கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுட்டிக் குழந்தை ஹ்யூகோ! வைரல் வீடியோ!
மேலும் படிக்க: Shamar Joseph: விருதை வென்ற முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்...ஷமர் ஜோசப்பின் அடுத்த சாதனை!