மேலும் அறிய

Yashasvi Jaiswal: மீண்டும் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்! இங்கிலாந்தை சிதறடித்த இளம் நாயகன்!

Yashasvi Jaiswal Double Century: 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளாடியுள்ள ஜெய்ஸ்வால் இதுவரை 3 சதம், 2 இரட்டை சதம் அடித்துள்ளார்.

ராஜ் கோட்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின்  தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் அடித்த 2வது இரட்டை சதம் இதுவாகும். மேலும், இந்த 2 இரட்டை சதங்களும் இந்த தொடரில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் இதுவரை 3 சதம், 2 இரட்டை சதம் அடித்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசி 147 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். 231 பந்துகளில் 14 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் உதவியுடன் இரட்டை சதம் விளாசியுள்ளார். 

ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்: 

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதன்மூலம், நவ்ஜோத் சிங் சித்து மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10 சிக்ஸர்கள் அடித்து ஜெய்வால் முதலிடத்திற்கு முன்னேறினார். அதேசமயம், நவ்ஜோத் சிங் சித்து மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். 

மேலும், ஒரு டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்ததன் அடிப்படையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போது கூட்டாக முதல் இடத்தை எட்டியுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு  அக்டோபரில் ஜிம்பாப்வேக்கு எதிராக 257 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம்,  அன்றைய இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இன்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 236 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் உதவியுடன் 214 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், வாசிம் அக்ரமின் 27 ஆண்டுகால சாதனை சமன் செய்யப்பட்டது. 

போட்டி சுருக்கம்: 

இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் எடுத்தார். அதேசமயம் சுப்மன் கில் 91 ரன்களும், சர்பராஸ் கான் ஆட்டமிழக்காமல் 68 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில், முன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 319 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் 126 ரன்கள் முன்னிலை பெற்றது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget