மேலும் அறிய

Shikhar Dhawan Birthday: ஹேப்பி 37 ஷிகர் தவான்... பார்ட்டி கொண்டாடிய வீரர்கள்.. வைரலான வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவான் நேற்று 37ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவன் நேற்று 37ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சக வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வீடியோவை தவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்திய கிரிக்கெட் அணியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். ஷிகர் தவான் தலைநகர் டெல்லியில் 1985-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி பிறந்தார். 2 010 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். டெஸ்ட் போட்டியில் 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், 2011இல் சர்வதேச டி20 ஆட்டத்திலும் அறிமுகமானார்.

ஒரு நாள் தொடரில் இதுவரை 165 ஆட்டங்களில் விளையாடி 6,782 ரன்களை குவித்துள்ளார். அதில் அரை சதம் மட்டும் 39-ம், 17 சதங்களையும் பதிவு செய்துள்ளார். 841 பவுண்டரிகளையும், 79 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 ஆட்டங்களில் விளையாடி 2315 ரன்களையும், சர்வதேச டி20 தொடரில் 68 ஆட்டங்களில் விளையாடி 1759 ரன்களை விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் 206 ஆட்டங்களில் விளையாடி 6243 ரன்களை விளாசியிருக்கிறார் தவன்.

முன்னதாக, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டன் ஷிகர் தவன், 12ஆயிரத்துக்கு அதிகமான ரன்களை விளாசிய 8ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்த வரிசையில் முதலிடத்தில் 21,999 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.  அவரைத் தொடர்ந்து முன்னாள் வீரர்களான சவுரவ் கங்குலி (15,622 ரன்கள்), தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (15,271 ரன்கள்), இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி (13,786 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.

அவரைத் தொடர்ந்து எம்.எஸ்.தோனி 13,353 ரன்களையும், முகமது அசாருதீன் 12,931 ரன்களையும், யுவராஜ் சிங் 12,663 ரன்களையும் அடித்துள்ளனர். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி என விளையாட திட்டமிடப்பட்டது. 

இதில் டி20 தொடர் ஹர்திக் பாண்டியா தலைமையிலும், ஒருநாள் போட்டித் தொடர் ஷிகர் தவான் தலைமையிலும் நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கும் என பிசிசிஐ அறிவித்தது. ஏற்கனவே டி20 போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. 

View this post on Instagram
 
A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாண்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. 

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்களும், ஷிகர் தவான் 72 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும் அடித்தனர்.  இறுதியாக வாஷிங்டன் சுந்தரும் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்து அதிரடிகாட்ட இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவியாக இருந்தது.  307 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget