Watch Video: ஆரம்பமே அதிரடி! வங்கதேசத்தை வதைத்த ரோகித் சர்மா சிக்ஸர் மழை - நீங்களே பாருங்க
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் 2 பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
![Watch Video: ஆரம்பமே அதிரடி! வங்கதேசத்தை வதைத்த ரோகித் சர்மா சிக்ஸர் மழை - நீங்களே பாருங்க IND vs BAN Rohit Sharma hit consecutive two sixers first two balls watch video Watch Video: ஆரம்பமே அதிரடி! வங்கதேசத்தை வதைத்த ரோகித் சர்மா சிக்ஸர் மழை - நீங்களே பாருங்க](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/30/0a3ee5ebf8a4122b8dd45b6cad5b22d31727687870885102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி டெஸ்ட் தொடரில் தற்போது ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூர் நகரத்தில் நடைபெற்று வருகிறது.
சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கிய ரோகித்சர்மா:
கான்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. இதன்படி, ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர். ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர்.
Captain Rohit Sharma
— 𝐉𝐝_ (@EnPeyarDinesh) September 30, 2024
Father of Bazball#INDvBAN #RohitSharma #TVKFlag #Jaiswal pic.twitter.com/0HnKE2naQ7
இந்திய கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பினார். கலீல் அகமது வீசிய அந்த பந்தை ரோகித் சர்மா சிக்ஸருக்கு விளாச அந்த பந்து ரசிகரகள் அமரும் கூரைக்கு மேலே சென்று விழுந்தது.அந்த பந்து மட்டுமின்றி அவர் சந்தித்த அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு விளாசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிரடி காட்டும் இந்தியா:
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஹஷிப் தரவரிசையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் வலுவான நிலையில் நீடிக்கும். மேலும், அடுத்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு சவால் மிகுந்ததாக இருக்கும் என்பதாலும் இந்த போட்டியில் கட்டாய வெற்றி பெற இந்திய அணி அதிரடியாக ஆடி வருகிறது. ஆட்டத்தின் 2 நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி தற்போது வரை 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ரோகித் சர்மா 11 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்த நிலையில், ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன்கில் – ரிஷப்பண்ட் தற்போது ஆடி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)