Watch Video: அடுத்தடுத்த விக்கெட்களை அலேக்காக தூக்கிய ஜடேஜா.. இந்திய அணிக்கு மீண்டு மீண்டும் வந்து அசத்தல்!
நாக்பூரில் ஆஸ்திரேலியாவிக்கு எதிராக இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை எடுத்து இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஜடேஜா மீண்டு மீண்டும் வந்துள்ளார்.
நாக்பூரில் ஆஸ்திரேலியாவிக்கு எதிராக இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை எடுத்து இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஜடேஜா மீண்டு மீண்டும் வந்துள்ளார்.
தனது 11 வது ஓவரை வீச வந்த ஜடேஜா, மார்னஸ் லாபுசாக்னே மற்றும் மாட் ரென்ஷா ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்களை இழக்க இந்திய அணிக்கு உதவி செய்தார்.
Welcome back, Sir Jadeja. pic.twitter.com/wPkVT2pmvC
— Johns. (@CricCrazyJohns) February 9, 2023
ஜடேஜாவின் காயம்:
கடந்த ஆகஸ்ட் மாதம் முழங்கால் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடர், வங்கதேச தொடர், இலங்கை தொடர், நியூசிலாந்து தொடர் அனைத்து தொடர்களிலும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காயத்திலிருந்து மீள ஜடேஜா அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் பல மாதங்களாக ஓய்வில் இருந்தார். கடந்த 19ம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்ட ஜடேஜா, தற்போது மீண்டும் இந்திய அணிக்கௌ திரும்பி வந்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.