மேலும் அறிய

Watch Video: "மும்பை கா ராஜா" ஆஸ்திரேலிய மண்ணில் ராஜநடை போட்ட ரோகித்!

ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வரும் ரோகித் சர்மாவை மும்பை கா ராஜா என்று ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கு தனிப்பட்ட காரணங்களால் ரோகித் சர்மா ஆடாத சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்குகிறார்.

ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மா:

இதனால், இரண்டாவது போட்டி முதல் இந்த தொடரில் மீண்டும் கேப்டன்சி ரோகித் சர்மா வசம் செல்கிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது.

இதற்காக இந்திய அணி தற்போது பிங்க் நிற  பந்தில் ஆஸ்திரேலிய பிரசிடென்ட் லெவல் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.

மும்பை கா ராஜா:

இந்த போட்டி தற்போது கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஃபீல்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணி களமிறங்கியபோது, மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ரோகித்.. ரோகித் என்று கோஷங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

மைதானத்தில் கூடியிருந்த ரசிகர் ஒருவர் “ரோகித் சர்மா மும்பை கா ராஜா”  என்று கோஷம் எழுப்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடிய ரோகித்  சர்மாக கேப்டனாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஆனால், அவரை கடந்த முறை ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக மும்பை அணி நிர்வாகம் நியமித்தது.

அந்த தொடர் முழுவதும் மும்பை இந்தியன்ஸ் ஆடிய ஆட்டங்களில் மும்பை ரசிகர்கள் சிலர் ஹர்திக் பாண்ட்யாவை விமர்சித்தும், மைதானத்தில் ரோகித் மும்பை கா ராஜா என்று கோஷங்களை எழுப்பியும் வந்தனர். அப்போது இந்த விவகாரம் பெரியளவில் பேசப்பட்டது. பின்னர், ஹர்திக் பாண்ட்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் தெரியவந்த பிறகு ரசிகர்கள் பாண்ட்யாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.  பின்னர், டி20 உலகக்கோப்பை வெல்ல இந்திய அணி வெல்ல ஹர்திக் பாண்ட்யா முக்கிய காரணமாக திகழ்ந்ததுடன், துணை கேப்டனாகவும் அந்த தொடரில் விளங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!
அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!
யார் அந்த சார்? - திரும்ப திரும்ப திமுக அரசை சீண்டும் திருமா! கூட்டணியில் மீண்டும் சிக்கலா?
யார் அந்த சார்? - திரும்ப திரும்ப திமுக அரசை சீண்டும் திருமா! கூட்டணியில் மீண்டும் சிக்கலா?
Mayor Priya: ”பேட்ச் ஒர்க் வேண்டாமே” சென்னை மேயர் பிரியாவிற்கு கோரிக்கை - உயிர்களை காக்க ”தரமான சாலைகளே அவசியம்”
Mayor Priya: ”பேட்ச் ஒர்க் வேண்டாமே” சென்னை மேயர் பிரியாவிற்கு கோரிக்கை - உயிர்களை காக்க ”தரமான சாலைகளே அவசியம்”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்Tejasvi Surya marriage : தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? : Sivasri”இனி ஜெயிலுக்கு வரமாட்டோம்” உறுதிமொழி எடுத்த கைதிகள்! | Salem Prisoners new yearIrfan View Video | ”என் அரசியல் பின்புலம்...என்ன காப்பாத்துறது உதயநிதி?”உடைத்து பேசிய இர்ஃபான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!
அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!
யார் அந்த சார்? - திரும்ப திரும்ப திமுக அரசை சீண்டும் திருமா! கூட்டணியில் மீண்டும் சிக்கலா?
யார் அந்த சார்? - திரும்ப திரும்ப திமுக அரசை சீண்டும் திருமா! கூட்டணியில் மீண்டும் சிக்கலா?
Mayor Priya: ”பேட்ச் ஒர்க் வேண்டாமே” சென்னை மேயர் பிரியாவிற்கு கோரிக்கை - உயிர்களை காக்க ”தரமான சாலைகளே அவசியம்”
Mayor Priya: ”பேட்ச் ஒர்க் வேண்டாமே” சென்னை மேயர் பிரியாவிற்கு கோரிக்கை - உயிர்களை காக்க ”தரமான சாலைகளே அவசியம்”
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
Embed widget