மேலும் அறிய

IND Vs AUS 5th T20: கடைசி போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? ஆஸ்திரேலியா உடன் இன்று 5வது டி20 போட்டி

IND Vs AUS 5th T20: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி-20 தொடரின் கடைசி மற்றும் 5வது போட்டி இன்று நடைபெறுகிறது.

IND Vs AUS 5th T20: பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:

அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில், இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 5வது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்:

அதன்படி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி கடைசி போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், ஆறுதல் வெற்றியை பெற ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் - பலவீனங்கள்:

ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரிங்கு சிங் அதிரடியான பினிஷிங்கை தொடர்ந்து வழங்கி வருகிறார். முதல் 3 போட்டிகளில் ரன்களை வாரிக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள், ராய்பூர் போட்டியில் சிக்கனமாக ரன்களை கொடுத்து தொடரை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தனர். மறுமுனையில்,  ஆஸ்திரேலிய அணி நிலைத்து நின்று ஆடக்கூடிய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இன்றி திணற் வருகிறது.  அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருப்பதும், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்றைய போட்டியிலாவது அவர்களது பந்துவீச்சு எடுபடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மைதானம் எப்படி?

பெங்களூரு சின்னசாமி மைதானம் அளவில் சிறியது என்பதால் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால், பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த மிகுந்த சிரமப்படுவர். பனியும் போட்டியின் இரண்டாம் பாதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்ச தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது. 

உத்தேச அணி விவரம்:

இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா/ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்

ஆஸ்திரேலியா:

மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, மேத்யூ வேட் (கேப்டன்),  கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
Good Bad Ugly first single: கொளுத்து மாமே! குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் எப்போ? அஜித் ரசிகர்களே இதுதான் நாள்!
Good Bad Ugly first single: கொளுத்து மாமே! குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் எப்போ? அஜித் ரசிகர்களே இதுதான் நாள்!
Vijay: மதுரையில் பயந்து பயந்து ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படம்! என்ன படம்? ஏன்?
Vijay: மதுரையில் பயந்து பயந்து ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படம்! என்ன படம்? ஏன்?
TN Budget 2025 Women Welfare: அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
இந்திய ராணுவத்தில் சேரனுமா? ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
இந்திய ராணுவத்தில் சேரனுமா? ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Embed widget