ஜாக்கி சானின் சென்னை கோட்டை...அன்னா சாலையில் கொடிகட்டி பறந்த அலங்கார் தியேட்டர் பற்றி தெரியுமா
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைக் காட்டிலும் ஜாக்கி சான் படங்களுக்கும் ஜாக்கி சானுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியதற்கு காரணமாக அலங்கார் திரையரங்கம் இருந்தது

அலங்கார் திரையரங்கம்
1980 மற்றும் 90 களில் சினிமா விரும்பிகள் மத்தியில் பிரபலமாக இருந்த திரையரங்குகளில் ஒன்று அன்னா சாலையில் இருந்த அலங்கார் அல்லது நியு க்ளோப் திரையரங்கம். 1946 ஆம் ஆண்டு குஷல்தாஸ் சதுர்பூஜதாஸ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வரதராஜ பிள்ளை என்பவர் மாதம் 560 ரூபாய்க்கு இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து திரையரங்கம் ஒன்றை கட்டினார். அதுதான் அலங்கார் திரையரங்கம் என்று அறியப்பட்ட நியு க்ளோப் திரையரங்கம். 15 ஆண்டுகள் குத்தகை முடிந்த பின் இந்த நிலத்தோடு சேர்த்து திரையரங்கத்தையும் வரதராஜ பிள்ளையிடம் இருந்து பெற்றுக் கொண்டார் குஷல்தாஸ் சதுர்பூஜதாஸ். நியு க்ளோம் திரையரங்கத்திற்கு அலங்கார் திரையரங்கம் என பெயர் மாற்றினார்.
ஜாக்கி சான் படங்களின் கோட்டை
ஹாலிவுட் திரைப்படங்களை மட்டுமே திரையிட்டுவந்தது நியு க்ளோப் திரையரங்கம். சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ராக்கி , அர்னால்டு நடித்த ராக்கி ஆகிய படங்கள் இந்த திரையரங்கில் வெளியாகின. முக்கியமாக சென்னையில் ஜாக்கி சானின் கோட்டையாக திகழ்ந்தது இந்த திரையரங்கம். ஜாக்கி சான் நடித்த The Protector , Snake in the eagle Shadow , Thunderbolt ஆகிய படங்கள் இந்த திரையரங்கில் வெளியாகி பெரியளவில் ரசிகர்களை கவர்ந்தன. ஜாக்கி சானுக்கு சென்னையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக முக்கிய காரணமாக அலங்கார் திரையரங்கம் அமைந்தது. ஆஸ்கர் வி ரவிச்சந்திரன் இந்த படங்களை சீன மொழியில் இருந்து தமிழில் டப் செய்து வெளியிட்டார். ஜாக்கி சான் மட்டுமில்லாமல் அர்னால்டு , சில்வெஸ்டர் ஸ்டாலோன் போன்ற நடிகர்களும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டதற்கு அலங்கார் திரையரஙகமே காரணம்.
மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களின் வருகைக்கு பின் பல தனித்திரையரங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டு இடிக்கப்பட்டன. அதேபோல் வி.சி.டி கேசட்களின் வருகையும் திரையரங்கங்களுக்கு பெரிய சாபமாக அமைந்தது . அலங்கார் திரையரங்கம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தனியார் வணிக வளாகம் கட்டப்பட்டது. அலங்கார் திரையரங்கம் மட்டுமின்றி சென்னை அன்னா சாலையில் இருந்த பல திரையரங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக காணாமல் போயின.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

