IND Vs AUS 3rd T20I : கிரிக்கெட் மேட்ச்க்கு டிக்கெட் வாங்க கூட்ட நெரிசல்! 20 பேர் காயம்! போலீசார் தடியடி!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
![IND Vs AUS 3rd T20I : கிரிக்கெட் மேட்ச்க்கு டிக்கெட் வாங்க கூட்ட நெரிசல்! 20 பேர் காயம்! போலீசார் தடியடி! IND Vs AUS 3rd T20I Match Tickets Cricket Fans Chaos Breaks out Hyderabad Police Lathi Charge IND Vs AUS 3rd T20I : கிரிக்கெட் மேட்ச்க்கு டிக்கெட் வாங்க கூட்ட நெரிசல்! 20 பேர் காயம்! போலீசார் தடியடி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/22/4812792331066ea94bd370a7c9ced6991663844218028224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தது. எனினும் ஆஸ்திரேலிய அணி அசத்தலாக விளையாடி அதை சேஸ் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி நாளை நாக்பூரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய டி20 தொடரின் மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்களை வாங்க அதிகாலை முதல் ரசிகர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக வரிசையில் நின்று கொண்ட ரசிகர்களுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
#Update: 20 injured. 7 Shifted to yashoda Hospital Secunderabad. They have minor injuries. Treated at out patient level and kept for observation.
— @Coreena Enet Suares (@CoreenaSuares2) September 22, 2022
Paytm on Thursday opened counter at Gymkhana grounds- to sell tickets for the #IndiaAustralia match on 25th Sept
@NewsMeter_In pic.twitter.com/U0r1ejd7F4
இதன்காரணமாக அங்கு இருந்த கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த தடியடியில் தற்போது வரை சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
This is so disappointing. Passionated fans gathered at Gymkhana Ground to collect India Vs Australia tickets in Hyderabad and they're getting such treatment. pic.twitter.com/OIP96BClOH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 22, 2022
absolutely chaos .. is this the way to treat cricket fans ? Shame on organizers @BCCI @SGanguly99 @JayShah @azharflicks #INDvAUS https://t.co/fCyADnSHRF
— Kri (@KrishK74) September 22, 2022
😔 Shocked and saddened the most important stakeholders of the game from the country that lives and breathes this sport are having to experience this type of aggression when trying to buy tickets for a match.
— The Bharat Army (@thebharatarmy) September 22, 2022
This happens only in India! Why? 😡 #BharatArmy #INDvAUS #COTI 🇮🇳 https://t.co/HKrqUfDShs
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)