மேலும் அறிய

Indian Players Record: அடேங்கப்பா... ஒரே போட்டியில இவ்வளவு சாதனைகளா..? மிரட்டிய இந்திய வீரர்கள்..!

INDvsAUS 1ST Test: ஆஸ்திரேலிய அணியை படுதோல்வி அடையச் செய்த இந்திய அணியின் வீரர்கள் இந்த போட்டியில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர்.

இந்திய அணி – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர். அவற்றின் பட்டியலை கீழே காணலாம்.

1.அஸ்வின்

பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக கருதப்படுபவர் அஸ்வின். இந்திய அணியின் மூத்த ஆல்ரவுண்டரான அஸ்வின் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

Indian Players Record: அடேங்கப்பா... ஒரே போட்டியில இவ்வளவு சாதனைகளா..? மிரட்டிய இந்திய வீரர்கள்..!

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டை கைப்பற்றியபோது அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும், சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்தியர் மற்றும் 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

2.ஜடேஜா:

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜடேஜா இந்த டெஸ்ட் போட்டியில் அசுரத்தனமான ஃபார்முடன் கம்பேக் கொடுத்துள்ளார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.

Indian Players Record: அடேங்கப்பா... ஒரே போட்டியில இவ்வளவு சாதனைகளா..? மிரட்டிய இந்திய வீரர்கள்..!

ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து, 5 விக்கெட்டுகளையும் அதிக முறை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அஸ்வின் தன்வசம் வைத்திருந்தார். இந்த டெஸ்ட் மூலம் ஜடஜோ அஸ்வின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தலா 6 முறை இதே சாதனையை படைத்துள்ளனர்.

3.முகமது ஷமி

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி.  இவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். முகமது ஷமி இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷமியின் 6 எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

Indian Players Record: அடேங்கப்பா... ஒரே போட்டியில இவ்வளவு சாதனைகளா..? மிரட்டிய இந்திய வீரர்கள்..!

சர்வதேச அளவில் ரன்மெஷின் கிங் கோலியே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 24 சிக்ஸர்கள் மட்டுமே விளாசியுள்ளார். இன்றைய சிக்ஸர்கள் மூலம் முகமது ஷமி விராட்கோலியை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.

4.ரோகித்சர்மா

Indian Players Record: அடேங்கப்பா... ஒரே போட்டியில இவ்வளவு சாதனைகளா..? மிரட்டிய இந்திய வீரர்கள்..!

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பவர் கேப்டன் ரோகித்சர்மா. ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்திய அணிக்காக அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், அபாரமாக ஆடி சதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட், டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் 4வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
IND vs NZ: உலகக்கோப்பைக்கு இதுதான் சரியான ப்ராக்டிஸ்! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரும் நியூசி!
IND vs NZ: உலகக்கோப்பைக்கு இதுதான் சரியான ப்ராக்டிஸ்! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரும் நியூசி!
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Embed widget