IND vs AFG, Asia Cup LIVE :101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி..!
Asia Cup 2022 IND vs AFG LIVE Updates: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா-ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக 2 சூப்பர் 4 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதன்காரணமாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்து இருந்தது. அத்துடன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி அறுதல் வெற்றி பெற்று வெளியேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அத்துடன் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இவை தவிர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹரும் அணியில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சில தவறுகளை செய்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் வீரர்கள் தேர்வு சரியாக அமையவில்லை. அத்துடன் இந்திய அணியின் வீரர்கள் போட்டியின் போது சரியாக சிங்கிள் ரன்களை இரண்டு ரன்களாக மற்றவில்லை என்ற புகாரும் உள்ளது. அத்துடன் இந்திய அணியின் ஃபீல்டிங் இந்தத் தொடரில் மிகவும் மோசமாக அமைந்தது. குறிப்பாக முக்கியமான கட்டங்களில் இந்திய அணியின் வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்பி வருகின்றனர். இதுவும் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த தவறுகளை அனைத்தையும் இந்திய அணியின் வீரர்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக திருத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இதன்காரணமாக இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
முன்னதாக இந்தியாவின் தோல்வி தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தப் போட்டியில் முதல் 6 ஓவர்களில் சரியாக ரன்களை சேர்க்கவில்லை. அப்போது விக்கெட்களை தொடர்ந்து இழந்து கொண்டிருந்தோம். அதன்பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை சேர்க்க தவறிவிட்டோம்.
நேற்றைய போட்டியில் 10 முதல் 12 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். ஒரு சில நேரங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது வழக்கம். எங்களுடைய மிடில் ஆர்டரில் ஒரு இடது கை ஆட்டக்காரர் களமிறங்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதன்காரணமாக தினேஷ் கார்த்திக் வெளியே உள்ளார். இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தததால் நாங்கள் கவலைப்பட தேவையில்லை. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நிறையே டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி..!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் 88 ரன்களுக்கு 8 விக்கெட்...!
ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்களை எடுத்துள்ளது.
10 ஓவர்களில் 34 ரன்கள்..! 6 விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான்..!
இந்திய அணிக்கு எதிராக பேட் செய்து வரும் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
7 ரன்களில் அவுட்டாகி ஆப்கானிஸ்தான் கேப்டன்..!
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி 7 ரன்களில் அர்ஷ்தீப்சிங் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
ஆப்கானிஸ்தான் 19 ரன்களுக்கு 4 விக்கெட்..!
ஆப்கானிஸ்தான் அணியினர் 5 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்களை எடுத்துள்ளது.