ICC World Cup 2023: இதுதான் உலகக் கோப்பைக்கான உத்தேச அட்டவணை.. விரைவில் வெளியிட இருக்கும் ஐசிசி!
இந்தியா ஏற்கனவே நடத்தியிருந்தாலும், ஒருநாள் உலகக் கோப்பையை தனியாக நடத்துவது இதுவே முதல்முறை.
வரவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டி இந்தாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய போட்டியானது தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த போட்டியை இந்தியா ஏற்கனவே நடத்தியிருந்தாலும், தனியாக நடத்துவது இதுவே முதல்முறை. கடந்த காலங்களில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து இந்தியா தொடரை நடத்தி இருந்தது.
கடந்த காலங்களில் இந்தியா இதுவரை மூன்றுமுறை ஆசிய நாடுகளுடன் இணைந்து நடத்தியது. இந்தியா முதன் முதலாக கடந்த 1987 ஆண்டிலும், அதனை தொடர்ந்து 1996 மற்றும் 2011 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரை நடத்தியது.
இதுவரை 12 ஒருநாள் உலகக் கோப்பை பதிப்புகள் நடந்துள்ளன. முதன்முதலாக கடந்த 1975ம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை தொடர் நடந்தது.
2019 ம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்து அணி உலகக் கோப்பை தொடரை வென்றது. மறுபுறம், ஆஸ்திரேலியா ஐந்து முறை உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா இரண்டு முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளன.
ஐசிசி உலகக் கோப்பை 2023 உத்தேச அட்டவணை:
ஐசிசி உலகக் கோப்பைக்கான அட்டவணையை முன்கூட்டியே அறிவிக்கும். ஆனால், இந்த முறை அவ்வாறு செய்யவில்லை. கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை ஏப்ரல் 18ம் தேதியே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை நிர்வாகக் குழு விரைவில் வெளியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது ஒருநாள் உலகக் கோப்பை தொடர்...?
ஐசிசி உலகக் கோப்பை 2023 உத்தேச அட்டவணை குறித்த ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறும் என்றும், முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மேலும், இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்குகிறது என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேதி | போட்டிகள் |
அக்டோபர் 5 | இங்கிலாந்து vs நியூசிலாந்து |
அக்டோபர் 6 | பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் |
அக்டோபர் 7 | இங்கிலாந்து vs நியூசிலாந்து |
அக்டோபர் 8 | இந்தியா vs ஆஸ்திரேலியா |
அக்டோபர் 9 | A2 vs A3 |
அக்டோபர் 10 | இந்தியா vs இங்கிலாந்து |
அக்டோபர் 11 | ஆஸ்திரேலியா vs வங்கதேசம், பாகிஸ்தான் vs A2 |
அக்டோபர் 12 | ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து |
அக்டோபர் 13 | பாகிஸ்தான் vs A3 |
அக்டோபர் 14 | நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா |
அக்டோபர் 15 | இந்தியா vs பாகிஸ்தான் |
அக்டோபர் 16 | பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் |
அக்டோபர் 17 | நியூசிலாந்து vs பாகிஸ்தான் |
அக்டோபர் 18 | ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா |
அக்டோபர் 19 | ஆப்கானிஸ்தான் vs A3 |
அக்டோபர் 20 | இங்கிலாந்து vs பங்களாதேஷ் |
அக்டோபர் 21 | இந்தியா vs ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் |
அக்டோபர் 22 | நியூசிலாந்து எதிராக ஏ3 |
அக்டோபர் 23 | இந்தியா vs நியூசிலாந்து |
அக்டோபர் 25 | A1 vs A3 |
அக்டோபர் 26 | ஆப்கானிஸ்தான் vs A2 |
அக்டோபர் 27 | பங்களாதேஷ் vs A2 |
அக்டோபர் 28 | இந்தியா vs A1, ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து |
அக்டோபர் 29 | இங்கிலாந்து vs பாகிஸ்தான் |
அக்டோபர் 30 | ஆஸ்திரேலியா vs A3 |
அக்டோபர் 31 | இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா |
நவம்பர் 1 | இந்தியா vs A2 |
நவம்பர் 2 | பங்களாதேஷ் vs பாகிஸ்தான் |
நவம்பர் 3 | ஆஸ்திரேலியா vs A2 |
நவம்பர் 4 | இந்தியா vs ஆப்கானிஸ்தான், வங்கதேசம் vs A3 |
நவம்பர் 5 | இங்கிலாந்து vs A3, ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் |
நவம்பர் 7 | இங்கிலாந்து vs A2 |
நவம்பர் 8 | இந்தியா vs A3 |
நவம்பர் 9 | ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா |
நவம்பர் 10 | பங்களாதேஷ் vs A2 |
நவம்பர் 11 | இந்தியா vs பாகிஸ்தான், இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் |
நவம்பர் 13 | பங்களாதேஷ் vs நியூசிலாந்து |
நவம்பர் 15 | அரையிறுதி 1 (1வது vs 4வது) |
நவம்பர் 16 | அரையிறுதி 2 (2வது vs 3வது) |
நவம்பர் 19 | இறுதிப்போட்டி |
இதுவரை, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன. மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதிசுற்றில் மோதி மீதமுள்ள A2 மற்றும் A3 இடங்களை நிரப்பி உலகக் கோப்பை தொடரில் நுழையும்.