மேலும் அறிய

Virat Kohli: ஐ.சி.சி.யின் கனவு டெஸ்ட் அணியில் ரோகித், விராட் கோலிக்கு இடம் இல்லை - ரசிகர்கள் ஷாக்

ஐசிசி கனவு டெஸ்ட் அணியில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி இடம் கிடைக்கவில்லை. இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.சி.சி.யின் கனவு டெஸ்ட் அணி:

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள கனவு டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தொடக்க வீரராகவும், இலங்கை அணியைச் சேர்ந்த திமுத் கருணரத்னே இரண்டாவது வீரராகவும் இடம் பிடித்துள்ளனர்அதேபோல், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன், நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் மற்றும் ஐந்தாவது இடத்தில் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆறாவது இடத்திலும், விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி ஆகியோரும் எட்டாவது இடத்தில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை டெஸ்ட் அணியின் கேப்டனாக ஐசிசி தேர்வு செய்திருக்கிறது. அதேபோல், இந்த அணியில் அஸ்வின், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 55.70 சராசரியில் 557 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதேநேரம்,  முதல் இடத்தில் இருக்கும் உஸ்மான் கவாஜா 1201 ரன்கள் குவித்திருக்கிறார்

விராட் கோலிக்கு இடம் இல்லை:

அதேபோல், திமுத் கருணரத்னேவும் கடந்த 2023 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர், 607 ரன்கள் எடுத்தன் மூலம் தான் இந்த பட்டியலில் இரண்டாவது வீரராக இடம் பிடித்துள்ளார். அதேபோல், அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் கேன் வில்லியம்சன் ஜோ ரூட் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோருடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த சராசரியில் குறைவான ரன்களே விராட் கோலி எடுத்திருப்பதால் தான் ஐசிசியின் இந்த கனவு டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால், ஐசிசி வெளியிட்டிருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கான கனவு அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைத்திருக்கிறது. அதன்படி,  2023 ஆம் ஆண்டில் 27 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 72.47 என்ற சராசரியுடன்  99.13 ஸ்ட்ரைக் ரேட் எடுத்து ஆறு சதங்கள் மற்றும் எட்டு அரைசதங்கள் என மொத்தம் 1,377 விளாசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ICC ODI Team Of The Year: "ஆல் ஏரியாவுலயும் அண்ணன் கில்லிடா" ஐசிசியின் கனவு அணியின் கேப்டன் யார் தெரியுமா?

மேலும் படிக்க: ENG vs IND: இங்கிலாந்துக்கு எதிரான கோலி இல்லாத இந்திய அணி.. மாற்று வீரராக புஜாரா, ரஹானே திரும்புவது கடினம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget