IND vs ZIM : அஸ்வின், அக்ஷர், ஹர்திக் அபாரம்..! 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..! ஜிம்பாப்வே பரிதாப தோல்வி..
ICC T20 WC 2022, IND vs ZIM: டி20 உலககோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 42ஆவது ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரரான வெஸ்லி மதேவெரே ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஜிம்பாப்வே. அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஒரு கட்டத்தில் 17.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 115 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது. நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்திய அணி தாமாகவே அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அதனால், முன்பு இருந்ததுபோல் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழல் இல்லை. ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய ஆட்டம் சம்பிரதாய ஆட்டமே. இருப்பினும், உலகக் கோப்பைத் தொடரில் இரு அணிகளும் மோதும் முதல் ஆட்டம் இதுதான் என்பதால் இரு அணிகளுமே வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறது.
இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் விளையாடிய இந்தியா 186 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் அரை சதம் விளாசினார். கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, தொடர்ந்து கடந்த சில ஆட்டங்களில் அதிரடி காட்டிய விராட் கோலி இந்த ஆட்டத்தில் 26 ரன்களில் நடையைக் கட்டினார்.
SKY's the limit 🔥
— ICC (@ICC) November 6, 2022
For his breathtaking 25-ball 61*, Suryakumar Yadav is the @aramco POTM ⭐#T20WorldCup pic.twitter.com/0ET9rQGemZ
விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் வந்தவேகத்தில் சான் வில்லியம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பினனர் களம் புகுந்து சூர்யகுமார் யாதவும், ஹார்திக் பாண்டியாவும் அடித்து விளையாடினர்.நசூர்ய குமார் யாதவ் வாண வேடிக்கை காண்பித்தார். அவர் இந்த ஆட்டத்தில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் விளாசி 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் சான் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அரையிறுதியில் பாகிஸ்தான்
முன்னதாக, அடிலெய்டில் இன்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்திாயசத்தில் வெற்றி பெற்றது.