(Source: ECI/ABP News/ABP Majha)
World Cup Warm-up Match: கொட்டும் கனமழை.. இன்னும் தொடங்காத இந்தியா - இங்கிலாந்து பயிற்சி ஆட்டம்!
World Cup Warm-Up Match: இந்தியா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
World Cup Warm-Up Match: ஐசிசி நடத்தும் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் மிகவும் பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இதற்காக இந்தியாவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, வங்காள தேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் முகாமிட்டுள்ளன. தொடர் தொடங்குவதற்கு முன்னாதாக ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
அதில் இந்தியாவுக்கு நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்து அணியுடன் பயிற்சி ஆட்டம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கவுகாத்தியில் உள்ள பரஸ்சபர மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
போட்டிக்கு இரு அணிகளும் தயாராக இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து கனமழை பெய்ததால் ஆடுகளம் தார்பாயால் மூடப்பட்டது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஆகியுள்ளது.
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து
மற்றொரு பயிற்சி ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டி கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃப்ல்ட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கும் மழை பெய்து வருவதால் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டமும் தொடங்குவதில் கால தாமதம் ஆகியுள்ளது.