விடாமுயற்சியை முந்திய டிராகன்!
குறைந்த பட்ஜெட்டில் நடித்து, அதிக லாபம் கொடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் இயக்கியும் நடித்தும், ரூ.5 கோடியில் எடுக்கப்பட்ட லவ் டுடே, ரூ.100 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது
தற்போது, பிரதீப் நடித்துள்ள டிராகன் திரைப்படம் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது
கல்லூரி வாழ்க்கை, காதல், ஆபிஸ், காதல் தோல்வி என்று இளைஞர்களை கவரும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது
பல வகையில் கதை சென்றாலும், இந்த படத்தில் உள்ள உண்மையான கருத்து தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக உள்ளது
ரூ.35 கோடியில் டிராகன் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது
திரைக்கு வந்து 4 நாட்கள் கடந்த நிலையில் ரூ.60 கோடி வசூல் எட்டியிருப்பதாக தகவல்
பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து நடித்த 2 படங்களும் வெற்றி கண்ட நிலையில், அவரது 3 வது படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
முதல் திங்கள்கிழமை காட்சியில் இந்த ஆண்டில் விடாமுயற்சி ரூ. 2 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்தது
தற்போது அந்த வசூலை டிராகன் முறியடித்துள்ளது. இந்த படம் முதல் வாரத்தில் ரூ.3.81 கோடி வசூலித்ததாக தகவல்