மேலும் அறிய

'நான் தீப்தி ஷர்மா இல்லை...' கிரீஸை தாண்டிய ஜோஸ் பட்லரை எச்சரித்த ஸ்டார்க்... பட்லரை துரத்தும் மான்காட்!

அப்போது ஸ்டார்க் பேசுவது மைக்கில் தெளிவாக கேட்கிறது. "நான் தீப்தி இல்லை, ஆனால் இதை செய்வேன்",என்றார். பட்லர் ஆரம்பத்தில் கிரீஸை விட்டு வெளியேறியதை மறுத்துள்ளார்.

ஜோஸ் பட்லர் பந்து வீசுவதற்கு முன்பு கிரீஸை தாண்டியதாக எச்சரித்து பேட்டிங் செய்ய அனுமதித்த ஸ்டார்க்கின் வீடியோ வைரலாகி வருகிறது.

மான்காட்

நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் நிற்கும் பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் பந்து வீசும்முன் கிரீஸை விட்டு வெளியேறும்போது பந்துவீச்சாளர் பந்தை அவர் பக்கம் இருக்கும் ஸ்டம்பில் அடித்தால் அவர் அவுட் என்னும் விதிமுறை பல ஆண்டுகாலமாக பல சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

அஸ்வின், தீப்தி ஷர்மா என இந்தியர்கள் பலர் அதனை செய்ததால் விமர்சிக்கப்பட்டனர். பலர் இந்த முறையை நியாயமற்ற விளையாட்டு என்று கூறினர். ஆனால் சிலர் விதிகளில் உள்ளதைதானே செய்கிறார்கள் என்று கூறினர். இந்த சர்ச்சை வெடித்தபோது இனி இந்த மான்காட் முறை நியாயமற்ற விளையாட்டாக கருதப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், பெரும்பாலான பந்து வீச்சாளர்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, வெறும் எச்சரிக்கை மட்டுமே கொடுத்து பேட்டிங் செய்ய விடுகின்றனர். அதே போல ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வெள்ளிக்கிழமை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டியின் போது இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு வார்னிங் கொடுத்தார். ஆனால் அவர் அவுட் செய்யாமல் பேட்டிங் செய்ய விட்ட செயல் தற்போது விவாதத்தை எழுப்பியுள்ளது.

விடியோ காட்சிகள்

போட்டியின் ஐந்தாவது ஓவரில், ஸ்டார்க் தனது பந்து வீச்சில் திடீரென நின்று, திரும்பி வந்து பட்லரை முன்கூட்டியே கிரீஸை விட்டு வெளியேறியதற்காக எச்சரித்தார். அப்போது ஸ்டார்க் பேசுவது மைக்கில் தெளிவாகக் கேட்கிறது. "நான் தீப்தி இல்லை, ஆனால் இதை செய்வேன்",என்றார்.

பட்லர் ஆரம்பத்தில் கிரீஸை விட்டு வெளியேறியதை மறுத்துள்ளார். ஆனால் ஸ்டார்க் வீசியபோது ஜோஸ் பட்லர் கோட்டிற்கு வெளியே இருந்ததை காட்சிகள் தெளிவாகக் காட்டின. ஆனால் அதன் பிறகு அந்த ஓவரின் அடுத்த மூன்று பந்துகளிலும் பட்லர் விதிகளை பின்பற்றி உள்ளே நிற்பதை காட்சிகள் காட்டுகின்றன.

தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: இன்னும் 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கப் போகுது கனமழை...! குடையோடு வெளியில போங்க..!

பட்லரும் மான்காடும்

பட்லருக்கும் மான்காட் முறைக்கும் 'ரெண்டு விட்ட சம்மந்தம்' உண்டு. பட்லர் தனது வாழ்க்கையில் இரண்டு முறை இந்த பாணியில் அவுட் ஆக்கப்பட்டுள்ளார். அது அவரை பெரிதும் பாதித்துள்ளது. 2014இல் ஒருமுறை இலங்கையுடனான் ஒருநாள் போட்டியில் சசித்ர சேனநாயக்கா அவரை மான்காட் செய்து அவுட் செய்தார்.

2019இல் நடந்த ஐபிஎல் போட்டியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் அவரை அதே முறையில் அவுட் செய்தார். இருமுறை நடந்தபோதுமே பட்லர் அதற்கு எதிராக பேசினார். அவர் எப்போதுமே அந்த முறைக்கு எதிராக இருந்துள்ளார்.

நான் தீப்தி ஷர்மா இல்லை...' கிரீஸை தாண்டிய ஜோஸ் பட்லரை எச்சரித்த ஸ்டார்க்... பட்லரை துரத்தும் மான்காட்!

முடியாத சர்ச்சை

“யாரும் மான்காடை விளையாட்டில் பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் எப்போதும் பேட்டுக்கும் பந்துக்கும் இடையிலான போரையும், கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டங்களைப் பார்ப்பதையும் விரும்புகிறார்கள். அவை எப்போதும் விரும்பத்தகாத நேரங்களில் நடப்பதாகத் தெரிகிறது", என்று கூறி இருந்தார்.

இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் இந்த மான்காட் முறை எப்போதெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் விவாதங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது. கடந்த முறை இது நியாயமற்ற விளையாட்டாக கருதப்படாது என்று கூறிய போதிலும், சில வீரர்கள் இதனை ஒரு விளையாட்டு நாகரிகமாக பார்த்து தவிர்க்க விரும்புகிறார்கள். அதே போல சிலர் இந்த முறைக்கு ஆதரவும் தருகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget