Shubman Gill: சுப்மன் கில்-ஐ நீக்குவது தப்பா? வரிந்து கட்டிக்கொண்டு வந்து பேசிய ஆஷிஷ் நெஹ்ரா
இந்திய அணியின் போஸ்டர் பாய் மற்றும் துணைக்கேப்டனான சுப்மன் கில் பெரிய அளவில் சோப்பிக்கவில்லை. முதல் டி20யில் 4 ரன்களும் இரண்டாவது டி20யில் கோல்டன் டக்காகி ஆட்டமிழந்து வெளியேறினார்.

டி20 வடிவத்தில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்குப் பிறகு சுப்மன் கில் போன்ற வீரரை மதிப்பிடுவது தவறு என்று குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கில்லுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
சொதப்பி வரும் கில்:
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றன. ஆனால் இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் போஸ்டர் பாய் மற்றும் துணைக்கேப்டனான சுப்மன் கில் பெரிய அளவில் சோப்பிக்கவில்லை. முதல் டி20யில் 4 ரன்களும் இரண்டாவது டி20யில் கோல்டன் டக்காகி ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கில்லின் டி20 பேட்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எடுத்து வைக்கப்பட்டு வருகிறது.
நெஹ்ரா ஆதரவு
டி20 வடிவத்தில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்குப் பிறகு சுப்மன் கில் போன்ற வீரரை மதிப்பிடுவது தவறு என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்தார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியானது, கில்லின் ஃபார்ம் குறித்து கவலைப்படுகிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது? ஐபிஎல் தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன.'மூன்று மாதங்கள் என்ன, ஐபிஎல் 3 வாரங்களுக்குப் பிறகு தொடங்கினாலும் நான் கவலைப்பட மாட்டேன், ஏனென்றால் நீங்கள் டி20 போன்ற வடிவத்தைப் பற்றி பேசுகிறீர்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை இந்தியா 2 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளன.' என்றார்.
இது தான் பிரச்னையே?
மேலும் இந்தியாவில் எண்களை மட்டும் பார்த்து முடிவுக்கு வருவதுதான் அடிப்படைப் பிரச்சனை என்றார். நம்மிடம் பிரச்சனை உள்ள இதுதான் . ==இந்த வடிவத்தில் சுப்மன் கில் போன்ற வீரர் 2 அல்லது 3 போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அது கடினமாக இருக்கும். நம்மிடம் நிறைய வீரர்கள் உள்ளனற்.
சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மாவை நீக்க விரும்பினால், சாய் சுதர்சன் மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோரை இன்னிங்ஸை தொடங்க வைக்கலாம். நீங்கள் அவர்களை அகற்ற விரும்பினால், வாஷிங்டன் மற்றும் இஷான் கிஷனை ஓப்பனிங் செய்ய வைக்கலாம். விருப்பங்கள் நிறைய உள்ளன. நீங்கள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சோதப்பினாலோ அல்லது ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளரின் புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லாவிட்டால், அவர்களை மாற்றப் பேசினால் அது கடினமாக இருக்கும்.' என்றார்.
கடந்த சீசனில் வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸுக்காக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவர் ஃபிட்டாக இருந்தால், இந்த முறை அவருக்கு அதிக போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நெஹ்ரா சுட்டிக்காட்டினார். ஐபிஎல் ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறும். குஜராத் டைட்டன்ஸ் ஏலத்தில் அதிகபட்சமாக 5 வீரர்களை வாங்க முடியும், அணியில் 4 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு கிடைக்கும். குஜராத் ஏலத்தில் 12.9 கோடி ரூபாய் பர்ஸ் பேலன்ஸ் வைத்துள்ளது.





















