Jasprit Bumrah : வாய் பேசிய சேப்பல்! செய்கை செய்த பும்ரா.. டக் அவுட்டான டிராவிஸ் ஹெட்
Jasprit Bumrah: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் டிராவிஸ் ஹெட் பும்ராவின் பந்து வீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.
பாக்சிங் டே டெஸ்ட்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன் படி சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினார்.
சாம் கொன்ஸ்டாஸ் அதிரடி:
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடி இந்திய பவுலர்களை கதிகலங்க வைத்தார், அவர் பும்ராவின் ஓவர்களில் முறையே 16 மற்றும் 18 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் அவர் 65 பந்துகளில் 60 ரன்களில் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் உஸ்மான் கவாஜாவும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
டிராவிஸ் ஹெட் டக் அவுட்:
ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசேன் ஜோடி நிலைத்து நின்று ஆட ஆஸ்திரேலிய அணி 237 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்த போது லபுசேன் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். அதன் பின்னர் இந்தியாவுக்கு எப்போது தலைவலியாக இருக்கும் டிராவிஸ் ஹெட் பும்ராவின் பந்து வீச்சில் கீளின் போல்டாகி வெளியேறினார்.
“Game-changer player is only one guy JASPRIT BUMRAH!" 💪😎#TravisHead "leaves" without troubling the scorers! 🫢#AUSvINDOnStar 👉 4th Test, Day 1 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/p6a0gzc3BB
— Star Sports (@StarSportsIndia) December 26, 2024
அதன் பின்னர் வந்த மிட்சேல் மார்ஷும் 4 ரன்களுக்கு பும்ராவின் வேகத்தில் வெளியேற்றினார், இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் பும்ராவை டிராவிஸ் ஹெட் சாதரண பந்து வீச்சாளராக தான் பார்க்கிறார் என்று பேசியிருந்தார்.
பும்ரா சாதரண பவுலர்:
இந்தத் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட்டின் அதிரடி பேட்டிங் அணுகுமுறை அவரது ஆச்சமற்ற தன்மையை காட்டியது. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க போராடி வரும் நிலையில் ஹெட் அவரை மற்ற பந்துவீச்சாளர்களைப் போலவே பும்ராவை நடத்தினார், "என்று சேப்பல் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
இந்த நிலையில் தான் இன்று 7 பந்துகளை சந்தித்த டிராவிஸ் ஹெட் பும்ராவின் பந்து வீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் நிரூபித்துள்ளார்.