Maxwell - Viniraman: அப்பாவானார் மேக்ஸ்வெல்... ஆனந்தத்தில் வினிராமன்.. குவியும் வாழ்த்துகள்..!
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலிய அணி மற்றும் ஆர்.சி.பி. அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக திகழ்பவர். இவர் கடந்தாண்டு தமிழ் பெண்ணான வினி ராமனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 5 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், கடந்தாண்டு இவர்களது திருமணம் தமிழ் முறைப்படி நடந்தது.
அப்பாவான மேக்ஸ்வெல்:
இந்த நிலையில், கர்ப்பணியாக இருந்த வினி ராமனுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக, மேக்ஸ்வெல்லின் மனைவி வினிராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பாதி முகத்தின் அருகில் மேக்ஸ்வெல் – வினி ராமனின் கைகள் இணைந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேக்ஸ்வெல் – வினி ராமன் தம்பதியினருக்கு கடந்த 11-ந் தேதியே குழந்தை பிறந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வினிராமனுக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
View this post on Instagram
லோகன் மேவரிக்:
லோகன் மேவரிக் மேக்ஸ்வெல் என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளனர். பெற்றோர்களாகியுள்ள மேக்ஸ்வெல்லிற்கும், வினி ராமனுக்கும் ரசிகர்களும், நண்பர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வினிராமன் ஒரு மருந்தாளுநர் ஆவார். இவர் படித்து வளர்ந்தது அனைத்தும் ஆஸ்திரேலியாவில் ஆகும்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல் 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதத்துடன் 339 ரன்களும், 128 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3490 ரன்களும் எடுத்துள்ளார். அதில் 2 சதமும், 23 அரைசதமும் அடங்கும். 98 டி20 போட்டிகளில் ஆடி 3 சதத்துடன் 2159 ரன்கள் விளாசியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் 124 போட்டிகளில் ஆடி 18 அரைசதங்களுடன் 2719 ரன்களும் எடுத்துள்ளார்.
சிறந்த ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் 60 விக்கெட்டுகளும், டி20யில் 39 விக்கெட்டுகளும், ஐ.பி.எல்.லில் 31 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். தந்தையான மேக்ஸ்வெல் மிகவும் உற்சாகத்துடன் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: SL vs PAK: கடைசி வரை திக்.. திக்..! கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி... போராடி தோற்றது பாகிஸ்தான்..!
மேலும்படிக்க: IND vs BAN: சம்பிரதாய ஆட்டத்தில் மோதும் இந்தியா - வங்கதேசம் அணிகள்.. ஆனாலும் காத்திருக்கும் சாதனை..!