மேலும் அறிய

IND vs BAN: சம்பிரதாய ஆட்டத்தில் மோதும் இந்தியா - வங்கதேசம் அணிகள்.. ஆனாலும் காத்திருக்கும் சாதனை..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்  அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றிருந்தது. இதில் லீக் போட்டிகள் முடிவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில், மீதமிருந்த 4 அணிகள் குரூப் 4 சுற்றுக்கு முன்னேறியது. 

இதில் குரூப் 4 சுற்றில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதிப் பெற்ற நிலையில், இப்போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே அமையும். முன்னதாக குரூப் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்த வங்கதேசம் அணி தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. 

முன்னணி வீரர்களுக்கு ஓய்வு?

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா தொடங்கி ஹர்திக் பாண்ட்யா வரை வலுவான ஒன்றாக திகழ்கிறது. முந்தைய ஆட்டத்தில் இலங்கை அணியை தனது சுழற்பந்து வீச்சால் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் துவம்சம் செய்தனர். இதில் ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒருநாள் போட்டியில் 200வது விக்கெட்டை எடுத்த 7வது வீரர் என்ற சாதனையை படைப்பார். 

மேலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சேர்க்கப்படலாம். அதேபோல்  அக்‌ஷர் படேலின் பார்ம் கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளதால் அவர் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சம்பிரதாய ஆட்டம் என்பதால் முன்னணி வீரர்கள் சிலர் இப்போட்டியில் விளையாட மாட்டர்கள் என கூறப்படுகிறது. 

அதேசமயம் வங்கதேச அணியை பொறுத்தவரை விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவர் நாடு திரும்பியுள்ளார். மேலும் தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம்  சூப்பர்4 சுற்றை சேர்த்து 4 ஆட்டங்களில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் அவர் கழற்றி விடப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தன்சித் ஹசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. 

இந்தியா - வங்கதேசம் அணிகள் இதுவரை 39 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில்  31 போட்டியில் இந்தியாவும் 7போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை தழுவியதில்லை என்பதால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அந்த பெருமையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் பிரேமதேசா மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இரு அணிகள் உத்தேச விவரம் 

இந்திய அணி: ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜடேஜா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், கே.எல்.யாதவ்

வங்கதேசம் அணி: நைம் ஷேக் , தவ்ஹித் ஹிரிடோய் , ஷமிம் ஹூசைன் , மெஹிதி ஹசன் மிராஸ் , ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் , ஹசன் மஹ்மூத் , ஷோரிஃபுல் இஸ்லாம் , தஸ்கின் அகமது , நசீம் அகமது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget