மாதம்பட்டி மானம் போகுதே...ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ..கிரிஞ்சு பண்ணி வச்சிருக்காரே
ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள மாதம்பட்டி ரங்கராஜின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் மாதம்பட்டி ரங்கராஜை ட்ரோல் செய்து வருகிறார்கள்

திருமணம் செய்து ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த புகார் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய மற்றொரு புதிய வீடியோவை ஜாய் கிரிஸில்டா அப்லோட் செய்துள்ளார். இந்த வீடியோவில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா விவகாரம்
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் மீது குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோக்களை அவர் தொடர்ச்சியாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு மாதம்பட்டி ரங்கராஜ் ட்ரோல் செய்யப்பட்டார்.
விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உதரவு
மாதம்பட்டியின் தந்தை மாதம்பட்டி பாகசாலா என்கிற கேடரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் மாதம்பட்டி ரங்கராஜன் பங்குதாரராக உள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றம்சாட்டிய ஜாய் சமூக வலைதளத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்தார். மாதம்பட்டி பாகசாலா பெயரை பயன்படுத்த ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கும்படி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிரான மனுவை தள்ளூபதி செய்தது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மாதம்பட்டிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது
ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட புதிய வீடியோ
தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய புதிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா அப்லோ செய்துள்ளார். இந்த வீடியோவில் " பொண்டாட்டி ஐ லவ் யு. நீ என் வாழ்க்கையில் வந்ததற்கு பிறகு நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரொம்ப எனர்ஜியாக இருக்கிறேன். சாப்பிட்டேன். லவ் யு . மிஸ் யு" என கூறி கேமராவுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்
Hey purusha 😂😂 DNA test eduka dhairiyam illaya ??? 😂😂😂 @MadhampattyRR #madhampattyrangaraj #chefmadhampattyrangaraj #fatherofthechild #madhampattyrangaraj #chefmadhampattyrangaraj #chefrangaraj #ragharangaraj #justiceforragharangaraj
— Joy Crizildaa (@joy_stylist) November 26, 2025
Ps : this video Enaku anupinadhu loves… pic.twitter.com/CXX90Ec2JF





















