Gambhir Corona Positive: முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி
2022 ஐபிஎல் தொடருக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்திருக்கும் கம்பீர், லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
After experiencing mild symptoms, I tested positive for COVID today. Requesting everyone who came into my contact to get themselves tested. #StaySafe
— Gautam Gambhir (@GautamGambhir) January 25, 2022
2022 ஐபிஎல் தொடருக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்திருந்த கம்பீர், ”மீண்டும் களத்தில் இறங்க பெருமை கொள்கிறேன். வெற்றி கனல் இன்னும் என்னுள் எரிந்து கொண்டு இருக்கிறது. வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை இருக்கின்றது” என ட்வீட் செய்திருந்தார். லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர், துணை பயிற்சியாளராக விஜய் தஹியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: ’பயந்துகொண்டு விளையாடாதீர்கள்!’ - இந்திய அணிக்கு கௌதம் காம்பிர் அட்வைஸ்
2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல, மற்றொரு புதிய அணியான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்தி வைத்து வருகிறது. அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடரை வெளிநாட்டுக்கு மாற்றும் திட்டம் இல்லை எனவும், இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும் பிசிசிஐ வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்