Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
Gautam Gambhir : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இடம்பெறாதது குறித்து கம்பீர் பேசியுள்ளார்.

இங்கிலாந்து எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறாதது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இதை குறித்து பேசியுள்ளார்.
இங்கிலாந்து தொடர்;
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணியின் மூன்று வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனால் புதிய கேப்டன் கில் மற்றும் புதிய அணியுடன் இந்திய அணி சவாலான இங்கிலாந்து தொடரை எதிர்க்கொள்ளவுள்ளது.
ஸ்ரேயாஸ் இல்லை:
இதனால் அணியில் அனுபவத்திற்காக சில மூத்த வீரர்கள் மீண்டும் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதில் முக்கிய பெயராக இருந்தது ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் தான். ஆனால் கில் தலைமையிலான அந்த 18 பேர் கொண்ட அந்த அணியின் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை. தற்போதுள்ள இந்திய அணின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்களுள் அவரும் ஒருவர்.
ஐபிஎல் மற்றும் ரஞ்சி:
ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை சிறப்பான ஆட்டத்தை கடந்த சீசனிலவெளிப்படுத்தினார். 5 போட்டிகளில் விளையாடிய அவர் 480 ரன்களை குவித்து மும்பை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர். அதே போல கடந்த ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்வதற்கு காரணம் ஸ்ரேயாஸ் ஐயர் தான். அதேப் போல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார் ஸ்ரேயாஸ் ஐயர். இப்படி நன்றாக விளையாடிய வீரர் ஒருவருக்கு எப்படி அணியில் வாய்ப்பு வழங்காமல் போகலாம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினார்.
கம்பீர் பதில்:
இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கம்பீரிடம் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறாதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு காட்டமாக பதில் சொன்ன கம்பீர் “நான் ஒன்றும் அணி தேர்வாளர் இல்லை என்று பதிலளித்து விட்டார்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெறாததற்கு காரணம் அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர் தானோ என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழும்பியுள்ளது.
இந்திய அணி:
சுப்மன் கில், ரிஷப் பண்ட், யஷஷ்வி ஜெய்ஷ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் , துருவ் ஜுரெல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங்,குல்தீப் யாதவ் ,நிதிஷ் குமார் ரெட்டி, ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஷ்ரதுல் தாக்கூர்





















