மேலும் அறிய

31 வயதில் 400 விக்கெட்டை எடுத்த என்னை ஏன் அணியில் சேர்க்கவில்லை...? தோனி மீது ஹர்பஜன் சிங் பகீர் குற்றச்சாட்டு!

Harbhajan Singh on Dhoni: இந்திய அணியில் இருந்து என்னை வெளியேற்றியது குறித்து தோனி கடைசி வரை விளக்கம் தரவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங்(harbhajan singh). இவர் இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து பெரிய சாதனை படைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக பந்துவீசி அசத்தி வந்தார். கடைசியாக அவர் 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இதையடுத்து, ஹர்பஜன் சிங் கடந்த வாரம் அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், ”அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வரவேண்டும். அந்தவகையில் என்னுடைய வாழ்க்கையில் அனைத்தும் அளித்த என மனதுக்கு நெருக்கமான கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடை பெறுகிறேன். இந்த 23 ஆண்டு காலம் என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்தநிலையில், 31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய எனக்கு அதன்பின்னர் இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை என்று ஓய்வுக்கு பிறகு பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "31 வயதில் 400 விக்கெட்டுகள் வீழ்த்த முடிந்த என்னால், அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் குறைந்தது 100 விக்கெட்களை வீழ்த்தியிருக்க முடியும். ஆனால் அதற்குப்பிறகு என்னை இந்தியஅணியிலேயே எடுக்கவில்லை. 400 விக்கெட் வீழ்த்திய ஒரு வீரர் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் இன்று வரை மர்மமாக இருக்கிறது. 

நான் வெற்றியேற்றப்பட்டபோது அணியின் கேப்டனாக தோனி(Dhoni) தான் இருந்தார். ஒரு சில குறிப்பிட்ட பிசிசிஐ அதிகாரிகள் என்னை அணியில் எடுக்க விரும்பவில்லை. அதை கேப்டனும் ஆதரித்து இருக்கலாம். என்னை அணியில் எடுக்காதது குறித்து எத்தனையோ முறை கேப்டன் தோனியிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால், இதுகுறித்து அவர் வாயை திறக்கவில்லை. இதற்கு மேல் இதை கேட்பது ப்ரோஜனம் இல்லை என்று விட்டுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் டெஸ்டில் 417 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்களையும் மற்றும் டி20 போட்டிகளில் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் நான்காவது இடத்தில் உள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vikravandi school child Death : சிறுமி உயிரிழந்தது எப்படி? நெஞ்சை நொறுக்கும் காட்சி  கதறும் தாய்Vikravandi school child : குழந்தை உயிரிழந்த விவகாரம்”இறப்பில் சந்தேகம் இருக்கு” 3 பேர் கைது!Jagdeep Dhankhar  : ”சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க?”கொதித்தெழுந்த ஜெகதீப் தன்கர் நடந்தது என்ன?Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Embed widget