Rehan Ahmed: பதினெட்டே வயதுதான்... இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அறிமுகம்.. புதிய பெருமையை பெற்ற ரெஹான் அஹ்மத்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 18 வயதான ரெஹான் அஹ்மத் என்ற லெக் பிரேக் ஸ்பின்னர் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகியுள்ளது.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராவல்பிண்டியில் முதல் டெஸ்டிலும், முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
கராச்சியில் தற்போது 3வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று தொடங்கியது. இந்தநிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் 18 வயதான ரெஹான் அஹ்மத் என்ற லெக் பிரேக் ஸ்பின்னர் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் ரெஹான் கடண்ட்ர்ஹ 1949 ம் ஆண்டு அறிமுகமான முன்னாள் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிரையன் க்ளோஸின் சாதனையை முறியடித்துள்ளார்.
1949 ஆம் ஆண்டு ஓல்ட் ட்ராஃபோர்டில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் முதன்முதலில் விளையாடியபோது பிரையன் க்ளோஸுக்கு 18 ஆண்டுகள் மற்றும் 149 நாட்கள் ஆகும், அதே சமயம் இன்றுவரை மூன்று முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அகமது, சனிக்கிழமையன்று மூன்றாவது டெஸ்ட் இன்று தொடங்கியபோது 18வயது 126 நாட்களில் அறிமுகமாகியுள்ளார்.
வீரர்கள் | அறிமுக ஆண்டு | அறிமுகமான வயது |
பிரையன் க்ளோஸ் | 1949 | 18 ஆண்டுகள் 149 நாட்கள் |
ஜான் க்ராஃபோர்ட் | 1906 | 19 ஆண்டுகள் 32 நாட்கள் |
டெனிஸ் காம்ப்டன் | 1937 | 19 ஆண்டுகள் 83 நாட்கள் |
பென் ஹோலியோக் | 1997 | 19 ஆண்டுகள் 269 நாட்கள் |
ஹசீப் ஹமீத் | 2016 | 19 ஆண்டுகள் 297 நாட்கள் |
இயன் பீபிள்ஸ் | 1927 | 19 ஆண்டுகள் 338 நாட்கள் |
சாம் கர்ரன் | 2018 | 19 ஆண்டுகள் 363 நாட்கள் |
இதுகுறித்து பேசிய இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியாவது, “ரெஹானைப் பார்ப்பது மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது எப்படி இருக்கிறது என்பதை அனுபவிக்க அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.
ரெஹான் பேட் மற்றும் பந்து இரண்டிலும் நிறைய திறமைகளை வைத்திருக்கிறார். எனவே திறமை மற்றும் உற்சாகத்துடன் ஒருவரைக் கொண்டு வந்து இந்த டெஸ்ட் போட்டி அவருக்கு என்ன கிடைத்தது என்பதைப் பார்ப்பதில் ஆர்வமாக உள்ளோம்.
“இவ்வளவு இளம் வயதில் ரெஹான் செய்யும் செயல்களிலும், அவர் பேட்டிங் செய்யும் விதத்திலும் அதிக சுதந்திரம் கொண்ட ஒருவரைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு ஏராளமான போட்டிகள் உள்ளன. மேலும், ஒரு லெக் பிரேக் சுழற்பந்து வீச்சாளர் உங்கள் அணியில் இருப்பது எவ்வளவு நல்லது என்று உங்களுக்கே தெரியும்” என தெரிவித்திருந்தார்.