Ind vs WI Delhi Test: டெல்லி டெஸ்ட்: ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டம்.. முதல் நாளில் ரன்களை குவித்த இந்திய அணி
இரண்டாவது டெஸ்டில், இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில், இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி டெஸ்ட்:
வெஸ்ட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்த இந்திய அணிக்கு, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் தனது நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஐந்தாவது முறையாக 150 ரன்களை கடந்த ஜெய்ஸ்வால், அசாதாரண ஆட்டத்துடன் ரசிகர்களை கவர்ந்தார். அவர் 173 ரன்களுடன் ஆட்டநிலையிலேயே இருந்து கொண்டிருந்தார். அவருடன் கேப்டன் ஷுப்மான் கில் 20 ரன்களுடன் ஆட்டத்தில் இருந்தார்.
ஏமாற்றம் தந்த ராகுல்:
முன்னதாக, அகமதாபாத் டெஸ்டில் சதம் அடித்த கே.எல். ராகுல் இம்முறை சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை, அவர் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார், முதல் விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் சேர்த்தனர்.
ஜெய்ஸ்வால்-சாய் சுதர்ஷன் அதிரடி:
அதன்பின், ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து இந்திய இன்னிங்சை தூக்கி நிறுத்தினர். இருவரும் இணைந்து 2வது 193 ரன்கள் சேர்த்தனர். சுதர்ஷன் 87 ரன்கள் எடுத்தார் – இது அவரது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை எடுத்த அதிகப்பட்ச ஸ்கோர் ஆகும்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 193 சேர்த்த இந்த ஜோடியை ஜோமல் வாரிக்கன் பிரித்தார். அவர் வீசிய பந்தை சுதர்ஷன் தவறாக மதிப்பிட்டதால் எல்.பி.டபிள்யூ ஆனார். அதன் பின், ஜெய்ஸ்வால் மற்றும் கில் இணைந்து 67 ரன்கள் சேர்த்து நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
That will be Stumps on Day 1️⃣
— BCCI (@BCCI) October 10, 2025
1️⃣7️⃣3️⃣*for Yashasvi Jaiswal 🫡
8️⃣7️⃣ for Sai Sudharsan 👏
3️⃣1️⃣8️⃣/2️⃣ for #TeamIndia
Captain Shubman Gill and Yashasvi Jaiswal will resume proceedings on Day 2. 👍
Scorecard ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/mRdU9jXIy3
ஜெய்ஸ்வாலின் சாதனை
ஜெய்ஸ்வால் இதுவரை 48 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடி, அதில் ஐந்துமுறை 150 ரன்களைத் தாண்டியுள்ளார். இரண்டாவது நாளில் இரட்டை சதம் அடித்தால், அது அவரது மூன்றாவது டபுள் சதமாக மாறும். இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அவர் 150 ரன்களை கடந்த இரண்டாவது முறை. 2024-இல் இங்கிலாந்துக்கு எதிரான விசாகப்பட்டினம் டெஸ்டின் முதல் நாளில் அவர் 179 ரன்கள் எடுத்திருந்தார்.




















