(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA 1st Test : இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்... 9 ஆண்டுகளுக்கு பிறகு சதம் விளாசிய முதல் வீரர்... டீன் எல்கர் சாதனை!
கடந்த 2014 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் டீன் எல்கர்.
டெஸ்ட் தொடர்:
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது.
இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 2 ரன்களில் நடையைக்கட்டினார். பின்னர், வந்த விராட் கோலின்38 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 31 ரன்களும் எடுக்க, இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் 70 ரன்களுடனும், சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியபோதே கேஎல் ராகுல் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது
இச்சூழலில், 137 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 101 ரன்கள் எடுத்தார். அந்த வகையில், கே.எல்.ராகுல் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். சென்சுரியன் மைதானத்தில் கே.எல்.ராகுல் அடிக்கும் 2 வது சதம், அதோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுலின் 8 வது சதம் இதுவாகும்பின்னர், தென்னாப்பிரிக்க வீரர் நந்த்ரே பர்கர் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இவ்வாறாக இந்திய அணி 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. தற்போதைய நிலவரப்படி தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இதனிடையே ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், ஐடன் மார்க்ரம் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் டீன் எல்கர் நிதானமாக விளையாடினார். டோனி டி ஜோர்ஜி 28 ரன்களும், கீகன் பீட்டர்சன் 2 ரன்களிலும் நடையைக் கட்டினார்கள். பின்னர் வந்த டேவிட் பெடிங்காம் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சதம் விளாசிய டீன் எல்கர்:
முன்னதாக, இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கர் ஆட்டமிழக்காமல் 211 பந்துகள் களத்தில் நின்று 140 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சரவதேச டெஸ்ட் தொடரில் 14 வது சதத்தை பதிவு செய்தார்.
இந்திய அணி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி விளையாடிய 7 டெஸ்ட் தொடரில் எந்த வீரரும் சதம் அடித்ததில்லை. இச்சூழலில், அந்த சாதனையை டீன் எல்கர் படைத்துள்ளார். அந்த வகையில், சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் தென்னாப்பிரிக்க வீரராக டீன் எல்கர் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: EXCLUSIVE: கபடி வீரர்களில் நிறைய பேர் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்... தமிழ் தலைவாஸ் வீரர்கள் சொன்ன விஷயம்..
மேலும் படிக்க: Sachin on KL Rahul: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர்... கே.எல்.ராகுலை திடீரென பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்... விவரம் இதோ!