Tamil Thalaivas: தமிழக வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்குமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் விருப்பம் இதுதான்!
Pro Kabaddi 2024: தமிழக வீரர்களான அல்லூர் சதீஸ், மாசான முத்து, செல்வமணி ஆகிய வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பை தமிழ் தலைவாஸ் அணி வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
புரோ கபடி லீக்:
10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்தாண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இதில், கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி அணியுடன் மோதியது. இதில், அசத்தலாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி தங்களது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. அதன்படி, 31 - 42 என்ற அடிப்படையில் தபாங் அணியை வீழ்த்தியது. அதேபோல், கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது தமிழ் தலைவாஸ் அணி.
தமிழக வீரர்கள்:
இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 48 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. பின்னர், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் அதிரடியாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 36- 38 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இப்படி கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அந்த அணி, பின்னர் விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
இதனிடையே, தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த வீரர்களான அல்லூர் சதீஸ், மாசான முத்து, செல்வமணி ஆகிய வீரர்களுக்கு முறையான வாய்ப்பை தமிழ் தலைவாஸ் அணி வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ரசிகர்கள் விருப்பம்:
முன்னதாக, கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தபாங் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரரான மாசாணமுத்துவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதேநேரம் அல்லூர் சதீஸ் மற்றும் செல்வமணி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மாசாணமுத்துவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலு, குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அல்லூர் சதீஸ் விளையாடினார். செல்வமண, அல்லூர் சதீஷ் மற்றும் மாசாணமுத்து போன்ற தமிழக வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Pro Kabaddi 2023 Table Top: முதலிடத்தில் புனேரி பல்டன்.. தமிழ் தலைவாஸ் எத்தனையாவது இடம்..? முழு அட்டவணை லிஸ்ட்!
மேலும் படிக்க:MS Dhoni: "ஒரு முறை கூட முடியல" தோனியிடம் எடுபடாத ஜாம்பவான் நாதன் லயனின் பவுலிங்!