Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
-
தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான் என தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பேசியதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஆளுநர் மாளிகை பரபரப்பான விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்கள் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது அணியாக இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
-
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்வராயன் மலைப்பகுதியில் 2,200 லிட்டர் கள்ளச்சாராயம்
கல்வராயன் மலைப் பகுதியில் 2 ஆயிரத்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திடீர் மழை! போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் திடீரென மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் நன்னிலம் நில உடைமைத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் சென்னையில் மோதும் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.