Cheteshwar Pujara : "ராகுல் ஒபன் பண்ணட்டும், ரோகித் 3-வதாக இறங்கலாம்.. " புஜாரா கொடுத்த ஐடியா!
Border Gavaskar Trophy 2024: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கே.எல் ராகுலே ஒப்பனராக களமிறங்கலாம் என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா வந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கே எல் ராகுல் பேட்டிங்கைத் தொடங்க வேண்டும் என்று சேதேஷ்வர் புஜாரா கூறியுள்ளார்.
பெர்த் டெஸ்ட்:
பெர்த்தில் நடந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் இல்லாததால், மிடில் ஆர்டரில் இருந்து ராகுலை தொடக்க ஆட்டக்காரராக இந்திய அணி களமிறக்கியது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் ஒரு முக்கியமான சதம் அடித்து அசத்தினார், அதே நேரத்தில் ராகுலும் சிறப்பாக செயல்பட்டார், பெர்த்தில் இரண்டு இன்னிங்ஸிலும் 26 மற்றும் 77 ரன்களை எடுத்தார் கே.எல் ராகுல்.
பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டாம்:
ராகுலின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய புஜாரா ”இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் மற்றும் யஷஸ்வி அதே பேட்டிங் வரிசையை இந்திய அணி தொடர முடிந்தால், ரோஹித் மூன்று இடத்தில் ஆடலாம், சுப்மான் கில் ஐந்தாவது இடத்தில் வந்து ஆடலாம்”
Cheteshwar Pujara said, "KL Rahul shouldn't bat lower than 3 in the upcoming Tests". pic.twitter.com/3f1wQw3bqo
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 28, 2024
"ரோஹித் ஓபன் செய்ய விரும்பினால், கே.எல் நம்பர் 3 இல் பேட் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அவர் கீழ் இறங்கி ஆட வேண்டாம். அவர் பேட்டிங் ஆர்டரில் ஒப்பனராக பேட் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அது அவரது ஆட்டத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும். இந்திய அணி அதில் மாற்றம் செய்யாது என்று நினைக்கிறேன் "
இதையும் படிங்க: KL Rahul : ”எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்” மகிழ்ச்சியில் கே.எல் ராகுல்.. பூரிப்பில் பார்த் ஜிண்டால்
கில் 5-வதாக களமிறங்க வேண்டும்:
கட்டைவிரல் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத கில், டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கும் பகல்-இரவு டெஸ்டில் விளையாடும் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கில் குறித்து பேசிய புஜாரா "கில்லிற்கு பேட்டிங் ஆர்டரில் சிறந்த நம்பர் 5 தான். அது அவரை பந்து பழையது ஆன பிறகு பேட்டிங் ஆட வர அனுமதிக்கிறது, நாம் இரண்டு விக்கெட்டுகளை ஆரம்பத்தில் இழந்தாலும், அவர் புதிய பந்தை திறமையாக விளையாட கூடிய திறன் கொண்டவர்" என்று புஜாரா கூறினார். "ஒருவேளை, அவர் 25 அல்லது 30 ஓவர்களுக்குப் பிறகு வந்தால், பந்து கொஞ்சம் அந்த ஸ்விங் ஆகும் திறனை இழந்து இருக்கும்அப்போது அவர் நேரடியாக தனது ஷாட்களை விளையாட முடியும். அவர் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட முடியும். மேலும் நாம் முதல் மூன்று விக்கெட்டுகளை முன்கூட்டியே இழந்தால், கில் பண்ட்டுக்கு முன்பாக வந்து விளையாடி பண்ட்டின் விக்கெட்டை காப்பற்றலாம். "அதனால் புதிய பந்தை பண்ட் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் புதிய பந்து கடினமாகவும் புதியதாகவும் இருக்கும் போது பண்ட் பேட்டிங் செய்ய வருவதை நான் விரும்பவில்லை. எனறு புஜாரா கூறினார்.