Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK தக்கவைக்கும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே
சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஐபிஎல் சீசன் மெகா ஏலாம்:
ஐபிஎல் சீசன் 18ன் மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய மாற்றம் செய்யப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேபோல் எத்தனை வீரர்களை தங்கள் அணியிலேயே தக்கவைத்துக் கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
சிஎஸ்கே தக்கவைக்கும் வீரர்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வீரராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை தான் தக்க வைத்துக் கொள்ளும். தோனி இருக்கும் போது அடுத்த கேப்டன் ருதுராஜ் தான் என அடையாள காணப்பட்டு முதல் சீசனில் வெற்றிகரமாகவே செயல்பட்டார். இதனால் ருதுராஜ்க்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு முதல் வீரராக தக்கவைக்கப்படுவார்.
இதேபோன்று இரண்டாவது வீரராக சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா தக்க வைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வீரராக தல தோனி தக்கவைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. நான்காவது வீரராக சமீர் ரிஸ்வி அல்லது சிவம் துபே தக்கவைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இருவரும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் என்பதால் இரண்டு பேரில் ஒருவர் சென்னை அணிக்கு கண்டிப்பாக செல்வார்கள். ஐந்தாவது வீரராக தீபக்சாகர் இடம் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் வெளி நாட்டு வீரர்கள் என்று பார்த்தால் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பத்திரானவை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துக்கொள்ளும். நியூசிலாந்து அணி வீரர் டெவென் கான்வேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ளும்.
மேலும் படிக்க: Watch Video: காணாமல்போன முகமது ஷமி.. கம்பேக் கொடுப்பது எப்போது?
மேலும் படிக்க: Women's T20 World Cup: மகளிர் டி 20 உலகக் கோப்பை.. எங்கே நடைபெறும்? ரேஸில் இருக்கும் இரண்டு நாடுகள்! வாய்ப்பு யாருக்கு?