Blind T20 World Cup final: பார்வை மாற்றுத்திறனாளிகள் டி20 உலகக்கோப்பையை 3வது முறையாக கைப்பற்றிய இந்தியா...!
Blind T20 World Cup final: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தினை வென்று உலக சாதனை படைத்துள்ளது.
Blind T20 World Cup final: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தினை வென்று உலக சாதனை படைத்துள்ளது. மேலும் இது ஹாட்ரிக் வெற்றியாகும்.
#TeamIndia beat Bangladesh by 120 runs to clinch the 3rd #T20WorldCup 🏆.
— All India Radio News (@airnewsalerts) December 17, 2022
📸: @ddsportschannel #BlindCricket🏏 | #INDvBAN pic.twitter.com/AKwH3fIkN7
இந்த போட்டியில் இந்திய அணியும் வங்கதேச அணியும் மோதிக்கொண்டன. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து வங்கதேச அணிக்கு 278 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன் பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வது இது மூன்றாவது முறையாகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த டி20 உலககோப்பைத் தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
India are the champions of blind cricket World Cup 2022 🏆🇮🇳
— CricTracker (@Cricketracker) December 17, 2022
📷: DD SPORTS#WorldCup #BlindWorldCup #CricketTwitter pic.twitter.com/rg4bQJXAyB
இதற்கு முன்னர் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடரில், இதுவரை இந்திய அணி 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ந்து இரண்டுமுறை வென்று நடப்புச்சாம்பியனாக உள்ளது. மேலும், 2024ஆம் உலகக்கோப்பை போட்டித் தொடரையும் இந்தியா தான் நடத்தவுள்ளது. 1998 முதல் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இதுவரை, தென் ஆப்ரிக்க அணி ஒரு முறையும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் இந்திய அணி இரண்டு முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.