ICC on Bengaluru pitch: இந்த பிட்ச் சராசரிக்கு கூட தகுதியில்லை... ஜவகல் ஸ்ரீநாத் போட்ட மார்க்...எந்த மைதானம் தெரியுமா?
பெங்களூரு டெஸ்டின் முதல் நாளில், 16 விக்கெட்டுகள் விழுந்தன, அவற்றில் ஒன்பது விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களால் எடுக்கப்பட்டன.
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சராசரிக்கும் குறைவான மதிப்பீட்டை வழங்கியுள்ளது. பெங்களூரு டெஸ்டின் முதல் நாளில், 16 விக்கெட்டுகள் விழுந்தன, அவற்றில் ஒன்பது விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களால் எடுக்கப்பட்டன.
ஐசிசி போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் சமர்ப்பித்த அறிக்கையில் ஆடுகளம் சராசரிக்கும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆடுகளத்தை ஐசிசி கண்காணிக்கும். இந்த மதிப்பீட்டின் காரணமாக, பெங்களூரின் எம்.சின்னசாமி ஸ்டேடியம் ஐசிசி பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் கண்காணிப்பு செயல்முறையின் கீழ் ஒரு டிமெரிட் புள்ளியைப் பெற்றுள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் பெங்களூரு சின்னசாமி மைதானம் 5 டிமெரிட் புள்ளிகளை பெற்றால் , அங்கு ஒரு வருடத்திற்கு சர்வதேச போட்டிகள் அங்கு நடத்த தடைவிதிக்கப்படும்
Bengaluru pitch used for 2nd India vs SL Test rated 'below average' by ICC
— ANI Digital (@ani_digital) March 20, 2022
Read @ANI Story | https://t.co/eX5XcZj6JE#ICC #Cricket pic.twitter.com/QkLi5j2yAk
"முதல் நாளிலேயே ஆடுகளம் நிறைய மாற்றங்களை தந்தது. அன்றைய நாளில் மட்டும் கிட்டத்தட்ட 16 விக்கெட்கள் சரிந்தது. அதேபோல், மூன்று நாட்களில் ஆட்டமும் முடிந்தது என்றும், இந்த பிட்ச் சராசரிக்கு குறைவானது என்றும் ஸ்ரீ நாத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐசிசி விதிகளின்படி, "ஒரு மைதானம் ஐந்து தகுதியற்ற புள்ளிகளைக் குவிக்கும் போது (அல்லது அந்த வரம்பை மீறினால்), 12 மாதங்களுக்கு எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்த இடைநீக்கம் செய்யப்படும், அதே நேரத்தில் 10 டிமெரிட் புள்ளிகள் பெறும்போது அந்த மைதானம் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியையும் நடத்த 24 மாதங்களுக்கு தடை விதிக்கப்படும்.
பெங்களூர் டெஸ்டின் முதல் நாளில், இந்தியா 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, நாள் ஆட்டத்தின் முடிவில், இந்திய பந்துவீச்சாளர்கள் இலங்கையை 86/6 என்று கட்டுப்படுத்தினர். இலங்கை அணி 2-வது நாளில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, அதுவும் மதிய உணவுக்கு முன்பே, 447 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையிடம் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இறுதியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்