மேலும் அறிய

Aus vs WI Test: 27 ஆண்டுகளுக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் படைத்த வரலாறு! சொந்த மண்ணில் சோடை போன ஆஸ்திரேலியா!

Aus vs WI Test: வெஸ்ட் இண்டீஸ் அணி 27 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.

சர்வதேச அளவில் கிரிக்கெட் மீதான மோகத்தினை அதிகப்படுத்திய அணி என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் அணிதான். அந்த அணி குறித்து இன்றுவரை உள்ள பொதுவான அபிப்ராயம் “ வெஸ்ட் இண்டீஸ் டீம்லதான் 11 பேரும் பேட்ஸ்மேன்ஸ்” என்பதுதான்.

வெஸ்ட் இண்டீஸ்:

ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் ஒரு அணி வெற்றி பெற கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் தேவை என்றால் அணியில் இருக்கும் முக்கிய விக்கெட்டுகள் அனைத்தும் வீழ்த்தப்பட்ட பின்னரும், கடைசி விக்கெட்டாக களத்தில் ஏதேனும் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் இருந்தால் அவரால் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட முடியும் என்ற நம்பிக்கை தானாக எழுந்தி விடுகின்றது. இப்படியான நம்பிக்கையை ஏற்படுத்தும் அணி வீரர்களால் ஒரு அணியாக தற்போது சிறப்பாக விளையாட முடியவில்லை என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அதிலும் சர்வதேச போட்டியோ அல்லது ஐசிசி போட்டிகளோ வெஸ்ட் இண்டீஸ் அணி மீது மற்ற அணிகளுக்கு உள்ள எண்ணம், டி20 போட்டி என்றால் அதிக கவனம் தேவை. அதுவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என்றால் நாமெல்லாம் எதுவும் செய்யத்தேவையில்லை, அவர்களே நமக்கு வெற்றியை பெற்றுத்தந்துவிடுவார்கள் எனும் அளவிற்கு இவர்களது ஆட்டம் உள்ளது. 

27 ஆண்டுகளுக்கு பின் வெற்றி:

அதேபோல் கிரிக்கெட்டில் கடந்த சில சதாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் அணி ஆஸ்திரேலியா. இந்த அணி தனது நாட்டில் மட்டும் இல்லாமல் உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் கோப்பையை தட்டி வரும் வல்லமை படைத்தவர்களாக உள்ளனர். 

இப்படியான ஆஸ்திரேலியா அணியின் சொந்த மண்ணில் அவர்களை 27 ஆண்டுகளுப் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அட்டவணைப் படுத்தப்பட்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.

திரில் வெற்றி:

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு, 216 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம்  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்றுள்ளது.  இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஆட்டநாயகன் விருது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சமர் ஜோசப்க்கு வழங்கப்பட்டது. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 1997ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget