AUS vs WI: 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வரலாறு படைத்த ஆஸ்திரேலிய பவுலர்கள்!
டெஸ்ட் போட்டிகளில் தற்போதைய பந்துவீச்சு தாக்குதலில் ஆக்ரோஷமான பந்துவீச்சு அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது.
அடிலெய்டில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியின் போது, 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையை ஆஸ்திரேலிய அணி செய்தது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 11 வீரர்களில் நான்கு பந்துவீச்சாளர்கள் 250+ விக்கெட்டுகளை வீழ்த்திய அணி வீரர்களை கொண்டு விளையாடிய ஒரே அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதுநாள் வரையிலும் எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்ததில்லை. இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் தற்போதைய பந்துவீச்சு தாக்குதலில் ஆக்ரோஷமான பந்துவீச்சு அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது.
250வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய ஜோஷ் ஹேசில்வுட்:
அடிலெய்டு டெஸ்டு தொடங்கியபோது ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டபோது, 250 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி விளையாடிய மூன்று பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அடிலெய்டு டெஸ்டின் போது, மற்றொரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் 250 டெஸ்ட் விக்கெட்டுகளை தொட்டார். இந்த பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆவார்.
இந்த போட்டியின்போது ஹேசில்வுட் இதுவரை 249 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் அலெக் அதானாஸேவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜோஷ் ஹேசில்வுட். இதன்மூலம், ஜோஷ் ஹேசில்வுட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 250 டெஸ்ட் விக்கெட்டுகளை நிறைவு செய்து ஆஸ்திரேலிய அணிக்காக வரலாற்று சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் ஹேசில்வுட் போட்டி தொடங்கியது முதலே சிறப்பாக விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்சில் 5 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தார். ஜோஷ் ஹேசில்வுட்டுடன் மற்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீச, இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலியாவின் தற்போதைய பந்துவீச்சு தாக்குதல்:
ஆஸ்திரேலியாவின் தற்போதைய பந்துவீச்சு தாக்குதலில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 511 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்குப் பிறகு மிட்செல் ஸ்டார்க் 348 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பேட் கம்மின்ஸ் தனது டெஸ்ட் விக்கெட்டுகளை 250+ ஆக எடுத்தார். தற்போது அவரது கணக்கில் 262 விக்கெட்டுகள் உள்ளன. ஜோஷ் ஹேசில்வுட், தற்போது 258 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
போட்டி சுருக்கம்:
முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களுக்குள் சுருண்டது. அதே நாளில், ஆஸ்திரேலியாவும் ஆட்ட நேர முடிவில் 59 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாகவே செயல்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமாக ஷமர் ஜோசப்பின் 5 விக்கெட் எடுத்து 283 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்ய உதவினார். ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் சதம் (119) அடித்து அசத்தினார். அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்களில் அனைத்து விக்கெட்டை இழக்க, 20 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்களை வீழ்த்திருந்தார்.