AUS Semi final chance: அரையிறுதிக்கு செல்லுமா? இலங்கையின் தயவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்திரேலியா!
ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய ஆப்கன் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்தில் ஜெயித்ததால் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இலங்கை அணி வென்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விட்டால் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலியா மிஸ் செய்யும்.
ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் அரையிறுதிக்கான வாய்ப்பு அந்த அணிக்கு ஓரளவு இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி ரன்ரேட்டிலும் குறைவாக இருக்கிறது. அந்த அணி -0.173 ரன் ரேட்டில் உள்ளது. அதேநேரம், இங்கிலாந்தும், இலங்கையும் நல்ல ரன் ரேட்டில் உள்ளன. ஆஸ்திரேலிய 7 புள்ளிகளுடன் குரூப் 1 பிரிவில் 2வது இடத்தில் இருந்தாலும், ரன் ரேட்டில் குறைவாக உள்ளது. இதுதான் அந்த அணிக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
A narrow win for Australia keeps their net run rate in the negative! 👀
— ICC (@ICC) November 4, 2022
If England beat Sri Lanka tomorrow, the hosts would miss a semi-final spot 😯#T20WorldCup 2022 Standings 👉 https://t.co/cjmWWRz68E#AUSvAFG pic.twitter.com/qCPzYznAz9
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான். இதையடுத்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் விளையாடியது.
முன்னதாக, ஆஸ்திரேலியா அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கிரீன் ஆகியோர் களமிறங்கினர். 3வது ஓவரில் கிரீன் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அப்போது அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிரடி வீரர்களான வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக, மேக்ஸ்வெல் 54 ரன்களும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களும் எடுத்தனர்.
ஸ்டாய்னிஸ், வார்னர் தலா 25 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன்-உல்-ஹக் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை சுருட்டினார். அடுத்தபடியாக ஃபசல்ஹக் ஃபரூக்கி 2 விக்கெட்டுகளை அள்ளினார்.
இவ்வாறாக அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரகமனுல்லா குர்பாஸ் 30 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கனி, இப்ராகிம் ஜத்ரான், குல்பதின் நயிப் ஆகியோரும் இரட்டை இலக்க ரன்களுடன் நடையைக் கட்டினர். கடைசி ஒரு ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்ற நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது ஆப்கானிஸ்தான். 1 விக்கெட்டை எடுத்து ரஷித் கான் மட்டும் நின்று விளையாடினார்.
கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து பலனில்லை. ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.