T20 World Cup 2022: “ஷமி சிறப்பாக செயல்பட்டார்; ஆனாலும்....” - கஷ்டமான தருணங்களை நினைவுகூர்ந்த பயிற்சியாளர்
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணிக்கான ஆட்தேர்வில் தொடக்கத்தில் முகமது ஷமி பெயர் இடம்பெறாமல் இருந்தது அவருக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது என்று ஷமியின் பயிற்சியாளர் முகமது பத்ருதீன் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணிக்கான ஆட்தேர்வில் தொடக்கத்தில் முகமது ஷமி பெயர் இடம்பெறாமல் இருந்தது அவருக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது என்று ஷமியின் பயிற்சியாளர் முகமது பத்ருதீன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
"ஈரப்பதமான மைதானங்களில் சிறப்பாக பந்துவீசுவதற்காக தினமும் 100 பந்துகளை வீசி பயிற்சி எடுத்துவந்தார் முகமது ஷமி. அவருக்கு ஈரப்பதமான மைதானத்தில் சிறப்பாக யார்க்கர் பந்துவீச வேண்டும் என்று விருப்பம்.
ஆரம்பத்தில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. இதனால், அவர் முதலில் கோபப்பட்டார். எனினும், அவர் அதிகம் அதுகுறித்து தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இஃப்திகர் அகமதுவின் விக்கெட்டையும், வங்கதேச வீரர் ஷான்டோவின் விக்கெட்டையும் வீழ்த்தி இரு ஆட்டங்களிலும் திருப்பு முனையை ஏற்படுத்திய ஷமி, அதை மைதானத்திலேயே கொண்டாடினார். அவரது இடைவிடாத பயிற்சியால் இதுபோன்ற விக்கெட்டுகளை எடுப்பது சாத்தியமானது.
முகமது ஷமிக்கு கொஞ்சம் விவசாய நிலம் உள்ளது. அங்கு பயிர்கள் நடவு செய்யப்படவில்லை என்றால் டிராக்டரை எடுத்து வந்து அதில் உழுது நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபடுவார் ஷமி.
View this post on Instagram
பின்னர், அந்த மண்ணிலேயே மணிக் கணக்கில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவார். அவர் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வதற்கு பெரிதும் விரும்ப மாட்டார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் கண்டிப்பாக உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எனது உள்ளுணர்வு கூறியது" என்று பத்ருதீன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலககோப்பைத் தொடருக்கான முதல் போட்டியில் இலங்கை – நமீபியா அணிகள் மோதின. இந்திய அணி தனது முதல் போட்டியிலே பாகிஸ்தானுடன் வரும் 23-ந் தேதி மோதியது.
இந்திய அணிக்கு பெரும் பலமாக கருதப்படும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா காயத்தால் விலகியிருப்பது பெரும் பின்னடைவாக இருந்தது. இதையடுத்து, அவருக்கு பதிலாக அணியில் இறங்கப் போவது யார்? என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அவருக்கு பதிலாக முகமது ஷமி களமிறங்க உள்ளது உறுதி செய்யப்பட்டது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ 15 பேர் கொண்ட அணியில் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி பெயர் இடம்பெற்றுள்ளது.