PAK vs BAN: பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்குமா வங்கதேசம்..? டாஸ் வென்று முதலில் பேட்டிங்..!
Asia Cup, PAK vs BAN: ஆசிய கோப்பைக்கான சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
![PAK vs BAN: பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்குமா வங்கதேசம்..? டாஸ் வென்று முதலில் பேட்டிங்..! Asia Cup Pakistan vs Bangladesh Super Fours 1st Match bangladesh won toss and elected bat PAK vs BAN: பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்குமா வங்கதேசம்..? டாஸ் வென்று முதலில் பேட்டிங்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/06/374cf947ecde5bfa650374fb447d7a501693992448452102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆசியக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 4 சுற்றுகள் இன்று எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.
வங்காளதேசம் பேட்டிங்:
இந்த போட்டியில் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் டாஸ் வென்றார். அவர் முதலில் பேட் செய்வதாக கூறியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் கடாஃபி மைதானத்தில் இந்தா போட்டி நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை மிகவும் பலம் பொருந்திய அணியாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என்று அந்த அணி மிக வலுவான அணியாகவே இந்த ஆசியக்கோப்பைத் தொடருக்கு வந்துள்ளது.
பேட்டிங்கில் பாபர் அசாம், ரிஸ்வான், இப்திகார், பக்கர் ஜமான், இமாம் உல் ஹக் என்று பெரிய பட்டாளமே உள்ளனர். பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது வங்காளதேசம் அணியுடன் சற்று பலம் குன்றிய அணியாகவே உள்ளது.
நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வி அடைந்த நிலையில், கிடைத்த சூப்பர் 4 வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வங்கதேசம் அணி முயற்சிக்கும். வங்கதேசம் அணியிலும் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பு வாய்ந்த வீரர்கள் உள்ளனர். மெகிதி ஹாசன். சான்டோ அபாரமான ஃபார்மில் உள்ளனர்.
சாதகமா? பாதகமா?
அவர்களது பேட்டிங்கிற்கு முகமது நம், தௌகித். முஷ்பிகிர் ரஹீம் ஆகியோரும் சிறப்பாக ஆடினால் அவர்கள் கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு சவால் அளிக்கக்கூடும். அனுபவ வீரரும், கேப்டனுமாகிய ஷகிப் அல் ஹசல் ஆல் ரவுண்டர் திறமையில் பாகிஸ்தானுக்கு இம்சை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஷாகின் அப்ரிடி, நசீம்ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் பெரும் பலமாக உள்ளனர். அவர்களது பந்துவீச்சிற்கு எதிராக முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ள ஷகிப் அல் ஹசனின் முடிவு வங்கதேசத்திற்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என்பது அவர்களது பேட்டிங்கில் தெரிந்து விடும்.
சூப்பர் 4:
சவாலான இலக்கை நிர்ணயித்தாலும் டஸ்கின் அகமது, ஹாசன் மக்முத், ஆஃபிப் ஹொசைன் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானுக்கு வங்கதேசம் அதிர்ச்சி அளிக்குமா? அல்லது வங்கதேசத்தை பாகிஸ்தான் துவம்சம் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான், வங்காளதேச அணிகள் மட்டுமின்றி இந்தியா, இலங்கை அணிகளும் முன்னேறியுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இதில் குறைந்தது 2 போட்டிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
மேலும் படிக்க: Australia WC 2023 Squad: உலகக்கோப்பையை எடுத்து வைக்கணுமோ! தரமான 15 பேரை களமிறக்கிய ஆஸ்திரேலிய அணி..!
மேலும் படிக்க: India Catch Efficiency: இந்தியா இப்படியே ஃபீல்டிங் செஞ்சுட்டு இருந்தா? உலகக்கோப்பை ட்ரீம் ’டர்’ ’டர்’தான்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)