SL vs PAK: அய்யய்யோ... ஒரு பக்கம் மழை.. இன்னொரு பக்கம் விக்கெட்.! கலக்கத்தில் பாகிஸ்தான்..!
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவ்வப்போது மழை குறுக்கிடுவதால் பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தான் ரசிகர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இலங்கையின் பந்துவீச்சில் தடுமாறிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணி 27.4 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்த நிலையில் ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மைதானம் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் பாகிஸ்தான் அணி ஆடி வரும் சூழலில், அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் பாகிஸ்தான் அணி நெருக்கடி ஆளாகி வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய பாகிஸ்தான் பெரியளவு ரன்களை குவிக்கலாம் என்று களமிறங்கியது. ஆனால், ஆட்டம் தொடங்கியவுடனே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடக்க வீரர் பக்கர் ஜமான் 4 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த பாபர் அசாம் – அப்துல் ஷாபிக் ஜோடி நிதானமாக ஆடியது.
இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தபோது பாபர் அசாம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பாபர் அசாம் 29 ரன்களில் 3 பவுண்டரிகளை அடித்த நிலையில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரிஸ்வான் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினார்.
ஏனென்றால், களத்தில் இலங்கை அணியினர் சுழல், வேகம் என்று மாறி மாறி தாக்குதல் தொடுத்து வந்தனர். நிலைத்து நின்று பின்னர் அதிரடிக்கு மாறிக்கொள்ளலாம் என்று எண்ணிய பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக முகமது ஹாரிஸ் 3 ரன்களிலும், முகமது நவாஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தீக்ஷனா, வெல்லலகே கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் பாகிஸ்தான் அணியினர் நிதானமாக ஆடினர்.
இந்த சூழலில், பாகிஸ்தான் அணி 27.4 பந்துகளில் 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. இந்த போட்டி கட்டாயம் நடைபெற்று பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் பாகிஸ்தான் ரசிகர்கள் மழை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
அதிர்ஷ்டவசமாக சில நிமிடங்களில் மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கியது 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் – இப்திகார் மிக அருமையாக பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி வருகின்றனர். முகமது ரிஸ்வான் - இப்திகார் ஜோடி அதிரடியாக ஆடி வருவதால் தற்போது பாகிஸ்தான் அணியினர் நிம்மதியாக உள்ளனர்.
இருப்பினும், இலங்கை பேட்டிங்கின்போது மழை குறுக்கிடாமல் இருக்க வேண்டியது மிக அவசியம் ஆகும். ரிஸ்வான் அரைசதம் கடந்து அதிரடியாக ஆடி வருகிறார்.
மேலும் படிக்க: Asia Cup 2023 Final: ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இருக்கு கனமழை.. கோப்பை யாருக்கு..? ரிசர்வ் டே இருக்கா..?
மேலும் படிக்க: SL vs PAK: இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்? இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று பலபரீட்சை