Asia Cup 2022 : ஆசிய கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர்கள் லிஸ்ட்! சோக கீதம் பாடும் இந்தியா!
ஆசிய கோப்பை தொடரில் டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களில் ஆதிக்கம் குறித்து இதில் காணலாம். இதுவரை நடந்த ஆசிய கோப்பை வரலாற்றில் வீரர்களின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டு பிரிவுகளிலும் இலங்கை அணியே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதிலும், முதல் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. இர்பான் பதான் 22 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா (19 விக்கெட்) 9வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (17 விக்கெட்) 13வது இடத்திலும் உள்ளனர்.
லசித் மலிங்கா :
இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா 15 இன்னிங்ஸ்களில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆசிய கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் உள்ளார். மேலும் அவர் இரண்டு நான்கு-ஃபோர்ஸ் மற்றும் மூன்று ஐந்து முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே ஆசிய கோப்பையில் சிறந்த பந்து வீச்சாக அமைந்தது. கடந்த 2014 போட்டியில் மலிங்கா 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இலங்கை பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.
முத்தையா முரளிதரன் :
இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ஆசிய கோப்பையில் 24 இன்னிங்ஸ்களில் 30 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளார். 2008 ம் ஆண்டில் முரளிதரன் வங்கதேசத்திற்கு எதிராக 31 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அதே ஆண்டில் 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தினார்.
அஜந்தா மெண்டிஸ் :
ஆசியக் கோப்பையில் வெறும் 8 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் இலங்கை அஜந்தா மெண்டிஸ் உள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு கராச்சியில் நடந்த ஆசியக் கோப்பை இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் 13 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்களை அள்ளினார்.
சயீத் அஜ்மல் :
பாகிஸ்தான் அணியில் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல், 12 இன்னிங்ஸ்களில் 25 விக்கெட்டுகளை அள்ளி பட்டியலில் 4 ம் இடத்தில் உள்ளார். கடந்த 2014 ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஷகிப் அல் ஹசன் :
வங்காள தேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், 18 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்களை கைப்பற்றி ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த டாப் 5 பந்து வீச்சாளர்களில் 5 ம் இடத்தில் உள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு இவர் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை எடுத்தார். அதே ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 42 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி மிரட்டியது குறிப்பிடத்தக்கது.