Ashwin on NZ series loss : ”நியூசிலாந்துடன் தோல்வி.. முக்கிய காரணமே நான் தான்” பழியை ஏற்றுக்கொண்ட அஸ்வின்
Ashwin on NZ series loss : ”நமக்கு அதிர்ஷ்டம் இல்லை, அதனால் தான் தோல்வி என ரவி அஸ்வின் வருத்தத்துடன் தனது யூடியுப் சேனலில் பேசியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ”நானும் ஒரு காரணம் தான் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து தொடர் தோல்வி:
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இழந்தது. இந்திய அணி இது வரை 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இது வரை வயிட் வாஷ் ஆனதே கிடையாது. ஆனால் இந்த தொடரை வயிட் வாஷ் ஆகி இந்திய அணி இழந்ததால் இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றில் இது கரும்புள்ளியாக அமைந்தது. இந்த தோல்வி குறித்து ரசிகர்களும் இந்திய அணி மீது விமர்சனத்தை கொட்டி தீர்த்தனர்.
பழியை ஏற்றுக்கொண்ட அஷ்வின்:
இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து தனது யூடியுப் சேனலில் பேசிய சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின், நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு நானும் ஒரு முக்கிய காரணம் தான். பின் வரிசையில் இறங்கி நானும் நிறைய ரன்களை அடித்திருக்க வேண்டும். ஆனால் நான் பல முறை எனது விக்கெட்டை கொடுத்து விட்டேன், எனக்குள் நானே பல கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தேன்.
என்னை பொறுத்தவரையில் எல்லாவற்றிருக்கும் முடிவு என்று ஒன்று இருக்கும். அதுபோல தான் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியை உள்ளூரில் வீழ்த்த முடியாமல் இருந்த 12 ஆண்டுக்கால சாதனைக்கு நியூசிலாந்து அணி முடிவு கட்டியது.
டெஸ்ட் போட்டிகளை வெல்ல அதிர்ஷ்டம் நமது பக்கம் இருக்க வேண்டும், அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். ஆனால் இந்த தொடரில் அதிர்ஷ்டம் நமது பக்கம் இல்லை, அது நியூசிலாந்து பக்கமே இருந்தது. அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான். அதற்கான வேலையையும் அவர்கள் செய்தார்கள். இந்த அதிர்ஷ்டம் தான் இந்த தொடரில் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியசமாக இருந்தது என்று தெரிவித்தார்.
இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி மீது பல விமர்சனங்கள் எடுத்து வைக்கப்பட்டது அதை அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உள்ளது. ஆனால் தனி மனித தாக்குதல்கள் எல்லாம் செய்வது எங்களை மிகவும் காயப்படுத்துகிறது.
ஒரு அணியாக நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் தோல்விக்காக யாரையும் குறை சொல்ல போவது கிடையாது. நியூசிலாந்து அணி எல்லா துறைகளிலும் எங்களை வீழ்த்திவிட்டார்கள். ஒரு அணியாக நாங்கள் தோற்றுவிட்டோம், மொத்த பெருமையும் நியூசிலாந்து அணியையே சேரும் என்று அஸ்வின் மிகுந்த வருத்தத்துடன் பேசியிருந்தார்.
நெருக்கடியில் இந்தியா
இந்த தொடர் தோல்விக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் வாய்ப்பு கடினமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றிப்பேற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெறும் என்ற இக்கட்டான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.