ACC U19: ஒரு நாயகன் உதயமாகிறான் ஒரே ஓவரில் 31 ரன்கள்! மிரட்டியெடுத்த 13 வயது சிறுவன்..
Vaibhav Suryavanshi : ஷார்ஜாவில் 19 வயது உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை அரையிறுதி போட்டியில் 13 வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒரே ஒருவரில் 31 ரன்கள் எடுத்து அசத்தினார்.
19 வயது உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பையில் இலங்கைகு எதிரான அரையிறுதி போட்டியில் 13 வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒரே ஒருவரில் 31 ரன்கள் பறக்கவிட்டு அசத்தினார்.
U19 ஆசியக்கோப்பை:
ஷார்ஜாவில் 19 வயது உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின, இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சேத்தன் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், கிரண் சோர்மலே மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க: Jasprit Bumrah : போர்க்கதை ஆயிரம்.. இன்னும் ஒரு விக்கெட் தான்.. சாதனைக்கு அருகில் பும்ரா!
வைபவ் சூர்யவன்ஷி அதிரடி:
இறுதிப்போட்டிக்குள் நுழைய 174 ரன்கள் என்கிற இலக்கை துரத்திய இந்திய அணி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. குறிப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல் அணியால் 1.10 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி அதிரடி தொடக்கம் தந்தார். இந்திய அணியின் இரண்டாவது ஓவரில் 3 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி என மொத்தம் 31 ரன்கள் விளாசினார்.
Vaibhav Sooryavanshi is making the Lankans tremble 💪
— Sony LIV (@SonyLIV) December 6, 2024
The 13-year-old scores 3️⃣1️⃣ runs in the 2️⃣nd over against 🇱🇰 in the #ACCMensU19AsiaCup Semi-Final 🔥
Watch #SLvIND, LIVE on #SonyLIV 📲 pic.twitter.com/ppIdd1BXA8
முதல் இரண்டு போட்டிகளில் பெரிதும் சோப்பிக்காத நிலையில் விமர்சனத்திற்கு உள்ளானர் வைபவ் சூர்யவன்ஷி, அதன் பிறகு ஐக்கிய அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாடியாக விளையாடி அரைசதம் அடித்தார். நேற்றைய இலங்கைக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் 24 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய அணி இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை சந்திக்கவுள்ளது, இப்போட்டியை இந்திய அணி வென்றால் 9வது முறையாக 19 வயது உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.